ரகசிய மனைவியாக வாழ்ந்தாரா சோனாலி போகட்? யாருக்கு? அம்பலப்படுத்தியது குடியிருப்பு ஆவணம்!!

By Narendran SFirst Published Aug 28, 2022, 11:04 PM IST
Highlights

மர்மமான முறையில் மரணம் அடைந்த சோனாலி போகட் அவரது உதவியாளருக்கு ரகசிய மனைவியாக வாழ்ந்து வந்தது அவரது குடியிருப்பு ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது. 

மர்மமான முறையில் மரணம் அடைந்த சோனாலி போகட் அவரது உதவியாளருக்கு ரகசிய மனைவியாக வாழ்ந்து வந்தது அவரது குடியிருப்பு ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த சோனாலி போகட் தொலைக்காட்சி  தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமானார். டிக்டாக் சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்களை சோனாலி போகட் வெளியிட்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தினார். அவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் புகழடைந்தார். இதை அடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டில்  பாஜகவில் இணைந்த சோனாலி போகட், கடந்த 2019ம் ஆண்டு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த நிலையில், சோனாலி போகத் கடந்த 22ம் தேதி இரவு கோவாவில் தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இதையும் படிங்க: வெளியானது காங்கிரஸ் தலைவர் பதவிக்கான உட்கட்சி தேர்தல் தேதி… அக.19ல் வாக்கு எண்ணிக்கை என தகவல்!!

போதை பார்ட்டியின் போது சோனாலி போகத்துடன் அவரது தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் சிங் ஆகியோர் உடனிருந்தனர். இவர்கள் இருவரும், சோனாலிக்கு கட்டாயப்படுத்தி போதை பொருளை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக 2 வீடியோவும் வெளியானது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை போதை பொருள் வியாபாரி ராம மந்த்ரேகர், உதவியாளர் சுதிர் சங்வான், அவரது நண்பர் சுக்விந்தர் சிங், நடைபாதை வியாபாரி தத்தபிரசாத் கவுங்கர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: நொய்டா இரட்டை கோபுரம் : தகர்ப்பில் சேதமடைந்த சுவர்; 30 ஆயிரம் டன் கழிவுகள் - அடுத்து என்ன ?

மேலும் இதுத்தொடர்பாக அரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள செக்டார் 102ல் அமைந்துள்ள குர்கான் கிரீன்ஸ் சொசைட்டி குடியிருப்பில் போலீசார் சோதனையிட்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட குடியிருப்பு வாடகை ஆவணங்களில் சோனாலி போகத்தின் கணவர் சுதிர் சங்வான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இருவரும் இந்த குடியிருப்பில் கணவன் - மனைவியாக வாழ்ந்தது அம்பலமாகி உள்ளது. மேலும், இந்த குடியிருப்புக்கு சுதிர் சங்வான் அடிக்கடி வந்து சென்றதையும், அப்பகுதியினர் உறுதிபடுத்தி உள்ளனர். கோவாவுக்குப் புறப்பட்டு செல்வதற்கு முன், சோனாலி போகத்தும், சுதிர் சங்வானும் ஒரே காரில் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதற்கிடையே சோனாலியின் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க உள்ளதாக கோவா மாநில முதல்வர் சாவந்த் தெரிவித்துள்ளார்.

click me!