congress: காங்கிரஸில் 5 எம்.பி.க்கள் திடீர் போர்க்கொடி!தலைவர் தேர்தலில் நியாயம்,வெளிப்படைமுக்கியம்!என்ன காரணம்

By Pothy RajFirst Published Sep 10, 2022, 9:48 AM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 தேர்தல் பொறுப்பாளரும், தலைவருமான மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 தேர்தல் பொறுப்பாளரும், தலைவருமான மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யாரெல்லாம் வாக்களிக்கலாம் என்ற பட்டியலை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், வேட்பாளருக்கும் வழங்கிட வேண்டும் ஒரு வேட்பாளரை பரிந்துரைக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது, யாருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதை சரிபார்க்க இந்தப் பட்டியல் தேவை என்றும் 5 எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி என்றாலே குழப்பம், உட்கட்சி மோதல் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. தலைவர் தேர்ந்தெடுக்க நடத்தபப்டும் தேர்தலிலும் இந்த குழப்பம், உட்கட்சி மோதல் தொடங்கி இருக்கிறது. சோனியா காந்திக்கு எதிராக 23 தலைவர்கள் கடிதம் எழுதியதன் விளைவாகத்தான் தலைவர் தேர்தல் நடத்தப்படுகிறது. இப்போது, மீண்டும் 5 எம்.பி.க்கள் கடிதம் எழுதியது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. 

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு புதிய பொறுப்பு… பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கடந்த 6ம்தேதி காங்கிரஸ் எம்.பி.க்கள் சசி தரூர், மணிஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் பர்தோலி, அப்துல் காலிக் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். 

காங்கிரஸ் கட்சிக்கு புதியதலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இந்த மாதத்திலும், தேர்தல் முடிந்தபின் தலைவர் குறித்த அறிவிப்பு அக்டோபரிலும் வெளியாகும். காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.

ஆனால், தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதுகுறித்து இதுவரை ராகுல் காந்தி கூறவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்துமம் தேர்தல் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரிக்கு 5 எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவீர்களா..? ராகுல் காந்தி கூறிய பதில் என்ன..?

காங்கிரஸ் தலைவர் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்படுவது அவசியம். அது குறித்து எங்களுக்கு கவலை இருக்கிறது. ஆதலால், தேர்தலில் யாரெல்லாம் வாக்களிக்கலாம், தகுதிவாய்ந்தவர்கள் என்பது குறித்த தேர்தல்வாக்காளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட வேண்டும். இந்த பட்டியலை வெளிப்படையாக அறிவித்தால்தான் வேட்பாளர்களுக்கும், தேர்ந்தெடுப்போருக்கும் தெளிவான முடிவு எடுக்க முடியும்.

வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் நாடு முழுவதும் உள்ள 28 பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் 9 யூனியன் பிரதேசங்களுக்கும் சென்று வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. 
காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்துவதில் வெளிப்படைத்தன்மையும், நியாயமாக நடப்பதையும் நினைத்து கவலைப்படுகிறோம். கட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைக்கு தவறான விளக்கம் அளிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. 

திவாலாகும் ”DDU கல்லூரி”..? நிதி பற்றாக்குறையால் ஆசிரியர்களின் சம்பள குறைப்பு.. சர்ச்சையில் ”ஆம் ஆத்மி அரசு”

கட்சியின் எந்தவொரு உள் ஆவணமும், அதில் உள்ள தகவல்களை தவறாகப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வெளியிடுங்கள் என  நாங்கள் ஆலோசனை தரவில்லை. 
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதற்கு முன், கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் குழு, பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். பட்டியலை வழங்கினால், தேர்தல் பணியில் இருந்து தேவையற்ற தன்னிச்சையான செயல்கள் அகற்றப்படும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்தனர்.

click me!