பீகார் காப்பகத்தில் பயங்கரம்! 40 சிறுமிகள் கற்பழிப்பு... ஒரு பெண்ணை கொன்று புதைத்த கொடுமை...

First Published Jul 23, 2018, 5:41 PM IST
Highlights
40 rapes girl killed and buried in Bihar shelter home cops dig compound


குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகள்  கற்பழித்தும் ஒரு பெண்ணை கொன்று காப்பக வளாகத்தில் புதைத்த  அதி பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முசாஃபர்பூரில் உள்ளது குழந்தைகள் நல காப்பகம் ஒன்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இங்கு மும்பையை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் ஒன்று கடந்த ஒரு மாதமாக ஆய்வு நடத்தியது. அப்போது கூட அங்கு நடக்கும் பலாத்கார சம்பவங்கள் குறித்து அந்த நிறுவனத்திற்கு புகார் செல்லவில்லை.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் 7 வயது முதல் 17 வயது வரையிலான உங்கள் சகோதரிகள், பிள்ளைகள் என காப்பகத்துக்கு நன்கொடை அளிப்பவர்களால் பல மாதங்களாக  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை நினைத்து பாருங்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

மேலும், பீகாரில் ஏராளமான பலாத்கார சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இதற்கு நடவடிக்கை ஏதும் அளிக்காமல் அரசு மவுனம் காக்கிறது. அவர்களுக்கு பதவிதான் முக்கியம் என்றும் கூறியிருந்தார்.

 

மேலும் இந்த விவகாரத்தில் காப்பகத்தை நடத்தும் என்ஜிஓவின் உரிமையாளர் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார் என்றும் தேஜஸ்வி தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம்  மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை எர்ப்படுத்தியதை அடுத்து  காப்பகத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் பல திடுக் தகவல்களை கூறினார். அதில் இதுவரை இந்த காப்பகத்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகளை கற்பழித்துள்ளனர். 

மேலும், ஒரு பெண்ணை கொலை செய்து இதே வளாகத்தில் புதைத்தும் உள்ளனர் என திடுக் தகவலை தெரிவித்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜேசிபி வாகனத்தை வரவழைத்து காப்பக வளாகத்தை தோண்டியும், காப்பகத்தின் சுற்றுச்சுவரும் இடித்தும் சோதனைப் போட்டு வருகின்றனர்.

click me!