அசாமில் இன்று காலை நிலநடுக்கம்.. அலறிய பொதுமக்கள்.. சாலையில் தஞ்சம்..!

By vinoth kumarFirst Published May 29, 2023, 9:44 AM IST
Highlights

கடந்த சில மாதங்களுக்கு முன் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கோரத்தாண்டவம் ஆடியதை அடுத்து இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 

அசாம் மாநிலம் குவஹாத்தி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கோரத்தாண்டவம் ஆடியதை அடுத்து இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் இருந்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம்.. முழு விவரம் உள்ளே..

இந்நிலையில், அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதி, குவஹாத்தி மற்றும் அதன் அருகில் உள்ள சில பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  4.4ஆக பதிவாகியுள்ளதாக  தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலையில் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

இதையும் படிங்க;-  புதிய பாராளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் - கிளம்பிய புது சர்ச்சை

நேற்று ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!