இளைஞர் தங்கள் மகளிடம் தவறாக நடந்து கொண்டதால் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மூவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 21 வயது இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து, சிறுநீரைக் குடிக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மார்ச் 31ஆம் தேதி மொராதாபாத் சிவில் லைன்ஸில் உள்ள அக்வான்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த அட்டூழியத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து குற்றவாளிகள் 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் பரவிய வீடியோவின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டனர் என மொராதாபாத் போலீசார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
ராவணனுக்கு மாட்டிறைச்சி கொடுத்த சீதை! ஐஐடி மாணவர்கள் நடத்திய நாடகத்தால் புதிய சர்ச்சை!
பாதிக்கப்பட்ட இளைஞர் தங்கள் மகளிடம் தவறாக நடந்து கொண்டதால் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். விரைவில் மீதமுள்ள குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள்.
சமூக ஊடகங்களில் பகிரும் வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் அறைக்குள் நுழைந்து இளைஞரை ஒரு கழிப்பறைக்கு இழுத்துச் செல்கிறார்கள். அங்கு ஒரு பெண் அவரை பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து சிறுநீர் குடிக்க வைக்கிறார். மற்றொரு வீடியோவில், இரண்டு பெண்கள் தங்கள் தாய் கூறுவதைக் கேட்டு அந்த இளைஞர் அடிக்கிறார்கள்.
ஒரு வீடியோவில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு செருப்பு மாலை போட்டு தாக்குவதையும் காண முடிகிறது. கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரம் தனது மகன் சித்திரவதை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை கூறுகிறார்.
பூமிக்கு அடியில் 700 கி.மீ. ஆழத்தில் ஒரு ரகசியப் பெருங்கடல்! அதிசயிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!