பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 13 லட்சத்தில் இருந்து 4 கோடியாக உயர்ந்துள்ளது.
பாஜக யுவமோர்ச்சா தேசியத் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 30% உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி பெங்களூரு தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தேஜஸ்வி சூர்யா, தனது பிரமாணப் பத்திரத்தில் ரூ.4.10 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.. 2019 மக்களவைத் தேர்தலின்போது தனக்கு வெறும் ரூ.13.46 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இருந்ததாக தேஜஸ்வி தெரிவித்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, தேஜஸ்வி சூர்யாவின் முக்கிய வருமானம் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ததில் இருந்து வந்ததாகும்.. பங்குகளில் ரூ.1.79 கோடியும், மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1.99 கோடியும் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக வாஷிங் மெஷின் செய்தி: அசாம் முதல்வர் அவதூறு நோட்டீஸ்!
பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று சூர்யா சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்தார். “பெங்களூரு தெற்கு மக்கள் என்னைப் போன்ற ஒரு இளைஞனை 2019 இல் 3.3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஆசீர்வதித்து என்னை வெற்றி பெற வைத்தனர். இந்த முறை, 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வார்கள் பிரதமர் மோடி ஜிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கொடுப்பார்கள்.
நாடு முழுவதும் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் 28 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024 மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜேடி-எஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.. கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராக. இருப்பினும், மொத்தமுள்ள 28 இடங்களில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெற்று சாதனை படைத்தது. காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.