ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்; தூக்கத்தை இழந்து பீதியில் உறைந்த பொதுமக்கள்

Published : Jun 14, 2023, 11:18 AM ISTUpdated : Jun 14, 2023, 12:23 PM IST
ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்; தூக்கத்தை இழந்து பீதியில் உறைந்த பொதுமக்கள்

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களின்போது கட்டிடங்கள் சேதம் அடைந்தன. ஐந்து பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா மற்றும் தோடா பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் அடுத்தடுத்து மொத்தம் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

புதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களின்போது ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்தன என்றும் குறைந்தது ஐந்து பேர் காயமுற்றனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS)  அளிக்கும் தகவலின்படி, முதல் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக இருந்தது. இது ஜூன் 14 அதிகாலை 2.20 மணிக்கு உணரப்பட்டது.

பேரிடர்களில் ஒரு உயிர்கூட போகக் கூடாது... ரூ.8,000 கோடி நிதியை ஒதுக்கி அமித் ஷா பேச்சு

நிலநடுக்கத்தின் மையம் கத்ராவில் இருந்து 10 கிமீ ஆழத்தில் 81 கிமீ தொலைவில் இருந்தது. இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி காலை 7.56 மணிக்கு உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

இதற்கு முன் செவ்வாய்க்கிழமை, ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடாவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளிலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது.

ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய MRF பங்கு மதிப்பு! இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் புதிய மைல்கல்

மதியம் 1:33 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்தது. நிலநடுக்கத்தின் மையம் 6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தோடா மாவட்டத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் லேசான காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய கண்டிஷன் போடும் டிசிஎஸ்; வேலையே வேண்டாம் என தூக்கி எறிந்த பெண் ஊழியர்கள்!

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!