'26/11 தாக்குதல் மீண்டும் நடக்கும்.': மும்பை காவல்துறைக்கு வந்த மற்றொரு மிரட்டல் அழைப்பு..

By Ramya s  |  First Published Jul 18, 2023, 11:44 AM IST

'26/11 தாக்குதல் பாணியில் மீண்டும் தாக்குதல் நடக்கும் என்று மர்ம நபர் ஒருவர்  மும்பை காவல்துறைக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.


யோகி ஆதித்யநாத் அரசுக்கும் மோடி அரசுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இன்று காலை மும்பை காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட அந்த நபர் 26/11 மும்பை தாக்குதல் பாணியில் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். குறிப்பிட்ட சில இடங்களில் தோட்டாக்கள் மற்றும் ஏகே-47 துப்பாக்கிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மும்பையில் உள்ள ஒர்லி காவல் நிலையத்தில் ஐபிசி 509 (2) பிரிவின் கீழ் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அவதூறு வழக்கு: ராகுல் காந்தி மனு மீது ஜூலை 21இல் விசாரணை - உச்ச நீதிமன்றம்!

Tap to resize

Latest Videos

இதுபோன்ற மிரட்டல் அழைப்பு விடுக்கப்படுவது இது முதல்முறையல்ல. ஜூலை 12-ம் டேதி, மும்பை காவல்துறைக்கு மற்றொரு அடையாளம் தெரியாத அழைப்பாளரிடமிருந்து அழைப்பு வந்தது, அவர் சீமா ஹைதர் என்ற பெண் தனது நான்கு குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து தப்பிச் சென்று சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். அவர் தன் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை எனில் "26/11 போன்ற" பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவோம்.” என்று தெரிவித்தார். 

உருது மொழியில் பேசிய அவர் "சீமா ஹைதர் திரும்பி வராவிட்டால் இந்தியா அழிந்துவிடும்" என்று தெரிவித்தார். மேலும் இந்த நடந்தால் அதற்கு உத்தரபிரதேச அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த மர்ம நபர் கூறியிருந்தார். எனினும் அந்த மர்ம குறித்த விவரங்களை சேகரித்து வருவதாகவும், யார் அழைத்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

சுவாரஸ்யமாக, பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, சரியான ஆவணங்கள் இல்லாமல் கிரேட்டர் நொய்டாவில் தங்கியதற்காக இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். மொபையில் கேமிங் செயலியான PUBG-ல் சந்தித்த நபரை பார்ப்பதற்காக, அவர் தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் சீமா ஹைதர் என்ற பெயரில் மிரட்டல் அழைப்பு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மீண்டும் மும்பை போன்ற தாக்குதல் நடத்தப்படும் என்று மும்பை காவல்துறைக்கு வந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.. உம்மன் சாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள்

click me!