
ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என ஸ்டேட் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
மோடி அறிவித்த பண பரிவர்த்தனை மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளின் பிரச்சனைகள் தற்போது தான் சற்று நார்மல் நிலைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என ஸ்டேட் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜூன் 1 ஆம் தேதி முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.
5000 ரூபாயிக்கு மேல் கிழிந்த நோட்டுகளை மாற்றினாலும் கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.