
2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை புறப்பட்டார் பிரதமர் மோடி. தொடர்ந்து அங்கு நடக்கும் புத்த பூர்ணிமா விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
புத்தர் பிறந்தநாளாகவும், ஞானம் பெற்று முக்திப் பேற்றினை எய்திய தினமாகவும், புத்த மதத்தினரின் புத்தாண்டாகவும் புத்த பூர்ணிமா தினம் கருதப்படுகிறது.
உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர், கவுதம புத்தர் பிறந்த நாளை புத்த பூர்ணிமா நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
சர்வதேச புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை செல்கிறார்.
புத்த மதத்தவர்கள் பரவலாக வாழ்ந்துவரும் 100-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த 400 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
இதையடுத்து பிரதமர் மோடி தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கு செல்லும் அவர் அங்கு புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டி நகரில் உள்ள கதிர் காமர் ஆலயத்தில் வழிபாடு செய்யும் மோடி, வெள்ளிக்கிழமை இரவு டெல்லி திரும்புகிறார்.