
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். இது குறித்த தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவிட் செய்துள்ள மோடி இலங்கைக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறேன். அங்கு வெசாக் தின கொண்டாட்டம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாளை நடைபெறவுள்ள வெசாக் எனப்படும் புத்த பூர்ணிமா தினத்தையொட்டி நடக்கும் கொண்டாட்டங்களில், தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று விமானம் மூலம், இலங்கை புறப்பட்டு செல்கிறார்.
தொடர்ந்து இலங்கையில்,தமிழர்கள் அதிகம் வாழும், தேயிலை தோட்டங்கள் உள்ள பகுதிகளுக்கு செல்லும் மோடி, திகோயா நகரில், இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள, 150 படுக்கைகள் உடைய மருத்துவமனையை திறந்து வைக்கிறார். மேலும் அங்குள்ள மலையக மக்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார்.
இந்த இலங்கை பயணம் குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் இலங்கைக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறேன். அங்கு வெசாக் தின கொண்டாட்டம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த பயணத்தின் போது தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.