
கருவில் இருப்பது ஆணா? பெண்ணா ? என்பதைக் கூறும் மருத்துவனை அல்லது ஸ்கேன் மையங்களை கண்டுபிடிக்க உதவும் கர்ப்பிணி பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 1 ஆம் தேதி முதல் இந்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாஜக அங்கு ஆட்சி அமைத்துள்ளது. முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தபடி விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா ? என்பதைக் கூறும் மருத்துவனை அல்லது ஸ்கேன் மையங்களை கண்டுபிடிக்க உதவும் கர்ப்பிணி பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.