
பாதத்திற்கேற்ற பந்து சிகிச்சை
ஒரு டென்னிஸ் பந்தின் மேலாக உங்களுடைய பாதத்தை வைத்து, சுழற்றிக் கொண்டிருந்தால் பாதம் மசாஜ் செய்யப்பட்டு, இரத்த ஓட்டம் உந்தப்படும் மற்றும் இறுக்கமான அல்லது வலி தரும் வகையில் உள்ள தசைகள் ஓய்வு நிலைக்கு திரும்பும். இன்னும் சற்றே தீவிரமான பலன் வேண்டுமென்றால், கோல்ஃப் விளையாடும் பந்தை எடுத்துக் கொண்டு, நின்ற நிலையில் இதே செயலை செய்யவும். இதனை தினமும் திரும்பத் திரும்ப செய்து வந்தால், பிளான்டர் பேஸ்சியா என்ற மிகவும் பரவலான ஆனால் மிகவும் வலி தரக்கூடிய எரிச்சல் தரும் நிலையிலிருந்து உங்களுடைய பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கண்களுக்கும் தேவை நிழல்
நீங்கள் எவ்வளவு அதிகமாக சூரியனின் புறஊதாக் கதிர்களால் நேரடியாக தாக்கப்படுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய கண்களிலுள்ள விழித்திரையில் அதிகமான சேதம் ஏற்படும். இதன் காரணமாக உங்களுக்கு வயது ஏற ஏற, கண்புரை மற்றும் வயது-சார்ந்த மாகுலர் திசு-செயலிழப்பு (AMD) போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, வெளியிடங்களில் நேரத்தை செலவிடும் போது சூரியஒளிக் கண்ணாடிகளை அணியுங்கள். குளிர்காலங்களிலும், மேக மூட்டமாக இருக்கும் நேரங்களிலும் கூட புறஊதாக் கதிர்களின் தாக்கம் இருக்கும்.
கண்களுக்கான தினசரி பயிற்சிகள்
இங்கு தரப்பட்டுள்ள எளிமையான டெக்னிக்கை பயன்படுத்தி உங்களுடைய கண் தசைகளுக்கு பயிற்சியளித்து வந்தால், கண்களிலுள்ள அழுத்தம் குறைந்து தலைவலி மற்றும் கண் வலி போன்றவை குறையும்.
உங்களுடைய கண்களுக்கு முன், 10 அடி தூரத்தில் பெரிய அளவில 8 என்ற எண் உள்ளதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த எண்ணை ஒரு பக்கமாக சாய்த்து, அந்த வடிவத்தை உங்களுடைய கண்களால் வரைய முயற்சி செய்யுங்கள், மெதுவாக. இவ்வாறு சில நிமிடங்களுக்கு செய்து வரவும்.
மூக்கு
நீங்களாகவே செய்யக்கூடிய இந்த வழிமுறையைப் பயன்படுத்தி சைனஸ் அழுத்தம் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் காணுங்கள். எப்படியெனில் உங்களுடைய நாக்கை அதன் மேல் பகுதியை எதிர்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து, கண்ணிமைகளில் ஒற்றை விரல் கொண்டு அழுத்தவும். மூக்கின் துவாராங்கள் வழியாக வாய்க்கு செல்லும் வோமர் எலும்பில், அடைப்புகளை இலக்கி, நீக்க இந்த வழிமுறை உதவும்.அதிலும் 20 நொடிகள் இவ்வாறு செய்து பாருங்கள், சைனஸ் தொல்லை இல்லாமல் போகும்.
'சத்தங்களுக்கு தேவை கட்டுப்பாடு'
நாம் பிறக்கும் போது இயக்கம் பெறும் காதுகள், கடைசி வரையிலும் நம்முடைய பிரதான உணர்வு உறுப்பாக உள்ளது. வயது ஏற ஏற, நமது மூளைக்கு ஒலியை கொண்டு செல்லும் நரம்புகள் சேதமடையவும், பலவீனமாகவும் துவங்குகின்றன. எனினும், நாம் கேட்கும் ஒலியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால், இந்த சேதத்தின் வேகத்தை மட்டுப்படுத்த முடியும். அதாவது, அமைதியை விரும்புங்கள்.
கிரீன் டீ
வாயில் ஒலியை ஏற்படுத்தவும், உணவை அரைக்கவும், முகத்தின் அமைப்பை உருவாக்கவும் உதவும் 32 நண்பர்களை பாதுகாக்க விரும்பினால், தினமும் கிரீன் டீ குடியுங்கள். கிரீன் டீ பாக்டீரியாக்களை தடுக்கவும், உங்களுடைய பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
ப்ளாஸிங் செய்யுங்கள்
தினமும் ப்ளாஸிங் செய்வது கடினமான விஷயமாக உங்களுக்குத் தோன்றினால், அது ஒன்றும் குடி முழுகிப் போய்விடும் விஷயம் என்று கவலை கொள்ள வேண்டாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ப்ளாஸிங் செய்து வாருங்கள். இந்த பழக்கத்தின் காரணமாக கிருமிகள் வாயில் தொற்றி ஒட்டிக் கொள்ளாமல் தவிர்க்க முடியும். இதன் மூலம் ஈறுகளில் நோய்கள் தாக்காமலும் தவிர்க்க முடியும்.
சீக்கிரம் படுக்கைக்கு செல்லுதல்
ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு முடிவில், ஒரு நாளைக்கு 7 மணி நேரங்கள் உறங்குபவர்கள் அல்லது இரவில் குறைவான நேரம் உறங்குபவர்கள், ஒரு மணி நேரம் முன்னதாக படுக்கைக்கு தூங்கச் சென்றால், அவர்களுக்கு உள்ள இரத்த அழுத்தம் வெகுவாக குறைகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய வலி போன்றவை தவிர்க்கப்படுகின்றன.
சமநிலையை மேம்படுத்துங்கள்
உங்களுடைய மூட்டுகளை நெகிழக் கூடியவையாகவும் மற்றும் உறுதியாகவும் வைத்திருக்க விரும்பினால், ஒவ்வொரு நாள் காலையிலும், ஒவ்வொரு பாதத்தையும் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு சமநிலையுடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த எளிய பயிற்சி, உங்களுடைய கால்களின் தசைகளை வலுப்படுத்தவும், அவற்றின் உணர்வுகளை மேம்படுத்தவும், நிலைத்தன்மை மற்றும் வயதாகும் போது கீழே விழாமல் தவிர்க்குமாறும் செய்ய உதவுகிறது.
சத்தாக சாப்பிட்டு வீக்கத்தை வற்றச் செய்யுங்கள்
மூட்டுகள் இணையும் இடத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தி ஆர்த்ரிடிஸ் நோயை வரவழைக்கும் வேலையை வீக்கங்கள் செய்கின்றன. இவ்வாறு வீக்கத்தை வரவழைக்கும் காரணிகளை எதிர்த்துப் போராடும் உணவுகளான கிரீன் டீ, பெர்ரிகள், கொழுப்புச்சத்து மிகுந்த மீன்கள், சுத்தமான ஆலிவ் எண்ணெய், சிவப்பு திராட்சைகள் மற்றும் ஆப்பிள்கள், பூண்டு, வெங்காயம், ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகள், மஞ்சள் மற்றும் இஞ்சி போன்றவற்றை சாப்பிட்டு, வீக்கத்திற்கு நோ சொல்லுங்கள்.