
சில எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை உடனுக்குடன் பேணிக் கொள்ள முடியும்.
எப்படி?
தலை முதல் பாதம் வரையிலான உடலின் பல்வேறு பகுதிளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில வழிகள் இதோ...
மூளைக்கு மீன் வேண்டும்
ஒமேகா-3 கொழுப்புகள் உள்ள சாலமன் அல்லது மக்கெரல் போன்ற எண்ணைய் மிகுந்த மீன்களை வாரந்திர உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மூளை சுருங்குவதை குறைக்க முடியும். நாம் 3 வயதை அடையத் தொடங்கிய நாள் முதல், மூளையின் அளவு சுருங்கத் தொடங்கி, மன ரீதியாக தளர்வு ஏற்படத் தொடங்கும்.
ஒரு நாளைக்கு 2 ஆப்பிள்கள்
ஆப்பிள்கள், குறிப்பாக ஆப்பிள் சாறு மூளையை இளமையாக வைத்திருக்க உதவுகிறது என்று அல்சைமர் நோய் பற்றிய பத்திரிக்கை (Journal of Alzheimer's Disease) நடத்திய சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 2 கப் ஆப்பிள் சாறு அருந்துவதன் மூலம் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளைகளில் ஏற்படும் கறைகள் குறைக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மூளைக்கு வேலை
சுடோகு மற்றும் குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்றவற்றை செய்து வருவதால் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும்
சருமத்திற்கு காய்கறிகளும், பழங்களும்
வானவில்லின் வர்ணங்களில் ஜொலிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், மஞ்சள், பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. செயின்ட் ஆண்டுரூஸ் பல்கலைக்கழகத்தினரால் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு காய்கறிகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நெடு நாட்களுக்கு ஆரோக்கியமான சருமம் இருப்பதாகவும் மற்றும் அவை மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வாரம் இருமுறை தாம்பத்ய உறவு
இராயல் எடின்பர்க் மருத்துவமனை நடத்திய ஆய்வு ஒன்றின் படி, ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கையை (வாரம் இரண்டு முதல் மூன்று முறை உடலுறவு கொள்ளுதல்) வாழ்ந்து வரும் தம்பதிகள், மற்றவர்களை விட 7 வயது குறைந்தவர்களாக தோற்றமளிக்கிறார்கள். ஏனெனில், தாம்பத்ய உறவு மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் இரவில் ஆழ்ந்த உறங்கவும் உதவுகிறது.
கருப்பைக்கு பால் அவசியம்
முழுமையான கொழுப்பு நிரம்பிய பாலை தினமும் குடித்து வந்தால் போதும், பெண்களுக்கு இருக்கும் மலட்டுத்தன்மை 25 சதவீதம் குறைந்துவிடும் என்று ஹார்வார்டு பல்கலைக்கழகம் செய்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஏனெனில், பால் பொருட்களில் உள்ள கொழுப்பு கருப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்தும். காலை நேர உணவுடன், ஒரு கப் பாலை தினமும் சேர்த்துக் கொள்வதும், ஒரு கப் தயிர் மற்றும் பாலாடைக்கட்டியில் ஒரு சிறு துண்டு ஆகியவற்றையும் உணவுடன் சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
மன அழுத்தத்தைக் குறைத்தல்
பெண்களின் மாதாந்திர மாதவிடாய் சுழற்சியிலும் மற்றும் அவர்களுடைய கருத்தரிக்கும் தன்மையை குறைப்பதற்கும் மன அழுத்தம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியாகும் அளவை குறைத்து, லிபிடோவையும் குறைத்து விடுகிறது. எனவே, இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள, தினமும் 10 நிமிடமாவது ரிலாக்ஸாக டிவி பார்த்தல் அல்லது படித்தல் போன்ற பொழுதுபோக்குகளை செய்து வாருங்கள்.
தொப்பை
சாதாரணமாக உடற்பயிற்சி செய்வதை விட, இசையை கேட்டுக் கொண்டே உடற்பயிற்சி செய்யும் போது கணிசமான அளவு எடை அதிகமாக குறைகிறது என்று கனடாவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உங்களுடைய உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இசையை சேர்த்துக் கொண்டு, அதீத சக்தி தரும் பாடல்களை iPod அல்லது mp3 பிளேயரில் போட்டுக் கேளுங்கள். மேலும், நீங்கள் ஜிம்முக்கு செல்பவராக இருந்தால் அல்லது வாக்கிங் மட்டும் செல்பவராக இருந்தால், பாட்டு கேட்டுக் கொண்டே அவற்றை செய்யுங்கள்.
பொட்டாசியம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுங்கள்
பொட்டாசியம் உடலின் நீர்மத்தை சமநிலை செய்யவும் மற்றும் தேவையற்ற வகையில் வயிறு உப்புசமடைவதையும் குறைக்க உதவுகிறது. அதிகளவு பொட்டாசியம் உள்ள உணவுகளாக வாழைப்பழம், பரங்கிக்காய், மாம்பழம், கீரைகள், தக்காளி, நட்ஸ் மற்றும் தண்ணீர்விட்டான் கொடி ஆகியவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இவற்றில் உள்ள அஸ்பாரகின் என்ற அமினோ அமிலம், நமது உடலில் அதிகமாக உள்ள நீர்மங்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை செய்கிறது.
ஓய்வு தேவை
யோகாசனம் அல்லது தியானம் போன்ற ஓய்வு நிலை உடற்பயிற்சிகள், கடினமான உடற்பயிற்சிகளான ஓட்டம் அல்லது ஜிம் உடற்பயிற்சிகள் போன்றவற்றை விட அதிகமான கலோரிகளை எரிப்பதாக அமெரிக்காவிலுள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த எளிய உடற்பயிற்சிகள், நம்மை அதிகமாக சாப்பிடத் தூண்டும் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவை குறைத்திட உதவுகின்றன.