தினை அரிசியில் இவ்வளவு சத்து இருக்குனு தெரிஞ்சா நீங்க வேற அரிசியைத் தொட மாட்டீர்கள்…

Asianet News Tamil  
Published : Jan 11, 2017, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
தினை அரிசியில் இவ்வளவு சத்து இருக்குனு தெரிஞ்சா நீங்க வேற அரிசியைத் தொட மாட்டீர்கள்…

சுருக்கம்

சிறு தானிய வகைகளில் ஒன்றுதான் தினை என்றும் அழைக்கப்படுகிறது. தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.

உண்மையில், இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும். மூலிகை மரங்களின் மருத்துவ குணங்களை அறிந்த அந்தக் காலத்திய மக்கள், அதன் பயன்களை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றைப் புனிதமாக வணங்கப்படும் கோயில்களில் வளர்க்கத் தொடங்கினர்.

இதனால் அம்மரங்கள் தெய்வீக முக்கியத்துவத்துடன் போற்றி வளர்க்கப்பட்டது. நாளடைவில், இவை தெய்வீக மரங்களாக உருப்பெற்று, மக்கள் மத்தியில் ஆன்மீக அந்தஸ்துடன் போற்றப்படத் தொடங்கியது. பழங்காலத்தில் இருந்து உருவான இந்த தெய்வீக மரங்கள் பல கோயில்களில் சில முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாக, மரங்களை தலவிருட்சமாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர்.

இதன் மூலம் கொடிய நோய்களுக்கு நிவாரணம் கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர். சின்னஞ்சிறு செடி கொடிகளை முதல் பெரிய பெரிய மரங்கள் வரை மருத்துவ குணங்கள் நிறைந்தவை. புனித மரங்களாக போற்றப்பட்டது. தானிய வகைகளில் தினையும் இவ்வாறு புனிதத்துவம் பெற்றது.

தினையின் வேறு பெயர்களாக இறடி, ஏனல், கங்கு என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பயிராகும் ஒருவகை உணவுப் பொருள் ஆகும். இனிப்புச் சுவை கொண்டது.

உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.

ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.

தினைமா - கஞ்சி - சாதம்

* தினையரிசி - உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும்.

* இதன் அரிசியைச் சிலர் சமைத்து உணவாகக் கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலைக் காக்கும் தன்மையுடையது.

* இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது. பண்டைக்காலத்திலிருந்தே தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது.

இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.

கி.மு. 2700-களிலேயே சீனாவிலும் பின்னர் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியதாகவும், பின்னர் இந்தியா, ஜப்பான், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் பயிரிடப்படுகின்றன.

இந்தியாவில் மட்டும் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் தினை உணவு தானியமாக பயிரிடப்படுகிறது.

அமெரிக்கா, மத்திய ஐரோப்பாவில் தீவனப் பயிராகவும், வளர்க்கின்றனர். இது வறட்சியைத தாங்கும் பயிர். இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்பது கூடுதல் தகவலாகும்.

சத்துக்கள்

ஈரப்பதம் - 11.2%

புரதம் - 12.3%

கொழுப்புச்சத்து - 4.3%

கனிமச்சத்து - 3.3%

நார்ச்சத்து - 8.0%

மாவுச்சத்து - 60.9%

உமி 20% வரையிலுமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புரதம்

தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும். இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.

இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.

மாவுச் சத்து

மாவுச்சத்து - 60%

ஸ்டார்ச்சு - 55%

சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன.

ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.

கொழுப்புச் சத்து

தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது.

உமியிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயில் பால் மிவுக், ஸ்டீரிக் என்ற நிறைவு பெற்ற கொழுப்பு அமிலங்கள் 10 சதம் வரையிலும் லினோலியரிக் அமிலம் 80% வரையிலும் ஒலியிக் அமிலம் 9% வரையிலும் உள்ளது.

கனிமச் சத்துக்கள்

இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை,கோதுமை,ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.

உயிர் சத்துக்கள்

தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.

தினையின் பயன்கள்

உமி நீக்கிய தினை உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்குக் கொடுக்கின்றார்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake