தண்ணீர்க் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்…

Asianet News Tamil  
Published : Jan 11, 2017, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
தண்ணீர்க் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்…

சுருக்கம்

கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திதே. உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம் சேர்த்துக்கொள்வது அவசியம்.

தண்ணீர் கீரை ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் தோல் மற்றும் முடி பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

தண்ணீர் கீரையின் சுகாதார நன்மைகள்:

பச்சை நிறத்தில் இருக்கும் அனைத்து காய்கறிகளும், கீரைகளும் சத்துகளை கொண்டிருந்தாலும் தண்ணீர் கீரையின் பயன்கள் மிகச் சிறந்ததாகவே விளங்குகின்றது.. தண்ணீர் கீரையில் வைட்டமின், தாதுக்கள் அதிகளவு கொண்டுள்ளதால் மிகச்சிறந்த கீரையாக விளங்குகின்றது. இந்தக் கீரையில் மிகச்சிறந்த வளங்களாக நார்சத்து உணவுகள், புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் சி யை கொண்டுள்ளது. ஆதலால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்பை குறைக்கும்:

எடை பிரச்சனையால் அவதிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிக எடையுடன் அவதிபடுபவர்கள் தங்கள் எடையை இயற்கையாகவே கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள தண்ணீர் கீரையை சாப்பிடலாம். தண்ணீர் கீரை கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். ஆதலால் தண்ணீர் கீரையை சூப் செய்தோ, சமைத்தோ எடுத்துக் கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சிக்கல்:

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது தண்ணீர் கீரை.

தண்ணீர் கீரையின் இலையின் சாறு கல்லீரல் மற்றும் மஞ்சள் காமாலைக்கு எதிராக செயல்படுகிறது.

இரத்தசோகை:

இரத்தசோகையால் அவதிபடுபவர்கள் தண்ணீர் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் தண்ணீர் கீரை இரும்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ளதால் இரத்தசோகைக்கு எதிராக செயல்படும். கர்ப்பிணிபெண்கள் கீரையை சேர்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் உடலுக்கு தேவையான ரத்த அணுக்களை உருவாக்கி ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும் முக்கிய பொருளாக இக்கீரை உள்ளது.

அஜீரணம் மற்றும் மலச்சிக்கல்:

ஃபைபர் சத்துகளை அதிகளவு கொண்டுள்ள தண்ணீர் கீரை செரிமானக் கோளாறுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையால் அவதிபடுபவர்கள் கீரையை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். குடல் புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. ஆகவே வாரத்தில் மூன்று நாட்கள் கீரையை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!