புற்றுநோய் செல்களை அழிக்கும் A + B + C  ஜூஸில் என்னென்ன பயன்கள் கிடைக்கும்னு இதை வாசிங்க தெரியும்...

 
Published : Dec 06, 2017, 01:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
புற்றுநோய் செல்களை அழிக்கும் A + B + C  ஜூஸில் என்னென்ன பயன்கள் கிடைக்கும்னு இதை வாசிங்க தெரியும்...

சுருக்கம்

You know what to do with the benefits of A B C juice that destroys cancer cells ...

ஆப்பிள், பீட்ரூட், காரட் ஆகிய சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எப்படி தயாரிப்பது:

A + B + C  

ஒரு ஆப்பிள் (A), ஒரு பீட்ரூட் (B) மற்றும் ஒரு காரட் (C)மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும். விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் . 


எப்படி பருகுவது? 

காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருக வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் 5 மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து பருகுவது முக்கியம்.

தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீடோ என்பவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.

கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள். அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவிய பின்னரே அரைக்கவும் .

இந்த பானம் அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் :

1. புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.

2. கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை குணப்படுத்துகிறது.

3. நுரையீரலை பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. 

4. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .

5. உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

6. இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது.

7. கண் மற்றும் பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.

8. மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.

9. உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

10. முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.

11. சீரணமண்டலம், தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

12. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

13. காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க