அதிமதுரம் பற்றி உங்களுக்கு தெரியாத சில அரிய தகவல்கள் இதோ...

 
Published : Dec 06, 2017, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
அதிமதுரம் பற்றி உங்களுக்கு தெரியாத சில அரிய தகவல்கள் இதோ...

சுருக்கம்

Here are some rare information you do not know about licorice ...

அதிமதுரம்  என அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra  என்பதாகும்.

வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள் சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி, பாம்பு இவற்றின் விஷம் நீங்கும்.ஒன்றரை அடி உயரம் வளரும் இச்செடி இயற்கையாக மலைப்பகுதிகளில் விளைகிறது. 

இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3 செ.மீ வரை நீளமாக சிறு முட்களுடன் காணப்படும். வேர்கள் கிளைத்தவை. இவை சிறியதும் பெரியதுமாக உட்புறம் மஞ்சள் நிறமாகவும், வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகவும் காணப்படும். 

வேர்களே மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகின்றன. மேலும், இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிமதுரம் வாணிப ரீதியாகப் பயிரிடப்படுகிறது. 

அதிங்கம்,அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதுரம் ஆகிய மாற்றுப் பெயர்களும் அதிமதுரத்திற்கு உண்டு. அதிமதுரம் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் நெல் வயல்களில் அதிமதுரமும் அடர்ந்த களைச்செடியாக வளர்கிறது.

இலைகள் இனிப்பு சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. வேர்கள் குளிர்ச்சித் தன்மை கொண்டவை. வேர் புண்கள், தாகம், இருமல்,தலைநோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். 

காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை, ஒற்றைத் தலைவலி ஆகியவற்றை கட்டுப்படுத்தும். முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையைப் பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு. 

ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும்.அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

தாய்ப்பால் பெருக....

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒருகிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச்சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

கல்லடைப்பு நீங்க....

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், நீர்க்கடுப்பை போக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க....

அதிமதுரம், கடுககாய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

இளநரை நீக்க....

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

PREV
click me!

Recommended Stories

Winter Tips : குளிர்காலத்தில் சளி அடிக்கடி வருதா? இந்த உணவுகளை உடனே ஒதுக்கிவிடுங்க
Thyroid Belly : தைராய்டால் வந்த அதிக எடை, 'தொப்பை' அற்புத மூலிகை பானம்! எப்படி தயார் செய்யனும்?