பனிக் காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க கண்டதெல்லாம் செய்யாமல் இதை செய்யுங்கள் போதும்...

Asianet News Tamil  
Published : Feb 02, 2018, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
பனிக் காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க கண்டதெல்லாம் செய்யாமல் இதை செய்யுங்கள் போதும்...

சுருக்கம்

You do not do this without protecting your skin during the snowy season.

பனிக் காலத்தில் சருமத்தை பாதுகாக்க 

** பொதுவாக பனிக்காலத்தில் சருமம் வறண்டு செதில் படிந்து காணப்படும். இதனால் முகம் மற்றும் உதடு பகுதிகளில் அவலட்சணமான தோற்றம் ஏற்படும். 

** அதற்கு பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவு பெறும். 

** பாலாடையுடன் கசகசாவை ஊறவைத்து அரைத்து முகம் மற்றும் கை கால்களில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிப்பதும் சருமத்தை மென்மையாக்கும்.

** வறண்ட சருமக்காரர்கள் பப்பாளி ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும். 

** எல்லா வகை சருமத்தினரும் தண்ணீர் அதிகமாக குடிக் வேண்டும். 

** அரை கிலோ துவரம் பருப்பு 100கிராம் பயத்தம் பருப்பு, 25 கிராம் கசகசா, 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் இவற்றை மெலியதாக அரைத்துக்கொள்ளவும். இந்த கலவையை தினந்தோறும் முகம் முதல் பாதம் வரை தேய்த்து குளிக்கவும். தொடர்ந்து இவ்வாறு 1 மாதம் செய்து வந்தால் தோலின் வறட்டு தன்மை நீங்கி மிருதுவாக ஜொலிக்கும்.

** பனிக்காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பனிக்காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச எண்ணெய் பசையையும் உறிஞ்சிவிடும்.

** மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு, போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து குளித்து வரவேண்டும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake