இப்படியெல்லாம் உடைகள் அணிந்தால் அப்படியெல்லாம்  வியாதிகள் வர தான் செய்யும்.. 

 
Published : Feb 02, 2018, 02:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
இப்படியெல்லாம் உடைகள் அணிந்தால் அப்படியெல்லாம்  வியாதிகள் வர தான் செய்யும்.. 

சுருக்கம்

If you wear clothes like this then the sick will come.

பெண்களே! இப்படியெல்லாம் உடைகள் அணிந்தால் அப்படியெல்லாம்  வியாதிகள் வர தான் செய்யும்.

பெண்கள் தினந்தோறும் பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் தான் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது என்பது தெரியுமா? 

அதேபோன்றுதான் நாம் ஃபேஷனாக நினைக்கும் ஒவ்வொன்றும் நமது உயிரை ஏதோ ஒரு வகையில் பறிக்கும் விஷமாக தான் இருக்கிறது. 

1.. ஸ்கின் ஃபிட் ஜீன்ஸ் 

ஸ்கின் ஃபிட் ஜீன்ஸ்  என்ற ஒன்றை விரும்பி அணிகிறோம் அது, ஆண், பெண் இருபாலருக்கும் பல உடல் நல பாதிப்புகள் ஏற்பட காரணியாக இருக்கிறது. அதிலும் முக்கியமாக ஆண்களின் விறைப்பையை பாதிக்கிறது. ஸ்கின்னி ஜீன்ஸ் அணிவதால் நரம்பு மண்டலம் பாதிக்கிறது.

2.. மார் கச்சு (curvy corset) 

உடல் வடிவு நன்கு அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பெண்கள் அணியும் மார் கச்சு தான் இந்த curvy corset. இதனால், வயிறு மற்றும் மார்பு சார்ந்த உடல் பாகங்கள் இயங்க சிரமப்படுகிறது. சுவாச பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.


3.. தாங் (Thong) 

ஓர் ஈர்ப்புக்காக அணியப்படும் இந்த உடை பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் பதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கின்றன. சில ஃபேப்ரிக் வகைகள் அலர்ஜிகள் ஏற்படுத்தவும் செய்கின்றன.

4.. லேக்கின்ஸ் 

தற்போது பெண்களை ஆட்டிப்படைக்கும் உடை லேக்கின்ஸ். கம்போர்ட் என்று கூறி இவர்கள் இறுக்கமாக அணியும் இந்த உடை வியர்வை வெளியேற விடாமல் தடுக்கிறது. ஆகையால் வியர்வை சருமதிலேயே ஒட்டிக்கொள்கிறது. இதனால், சரும பிரச்சனைகளும், அலர்ஜிகளும் ஏற்படும்.

5.. ஸ்விம்மிங் உடை 

ஸ்விமிங் செய்வதற்கு இந்த உடையை தவிர வேறு உடை இல்லை தான். ஆனால், நீச்சலடித்தவுடன், உடனடியாக இந்த உடையை மாற்றிவிட்டு, உங்கள் பிறப்புறுப்பு பாகங்களை நன்கு கழுவி, எரம் போகும் வரை துடைக்க வேண்டும். 

இல்லையேல், நீச்சல் குளத்து நீரில் இருந்து பரவிய பாக்டீரியா தொற்றுகள்,ம் பிறப்புறுப்பு பகுதிகளில் தொற்று அல்லது அலர்ஜிகள் ஏற்படுத்திவிடும்.

6.. சாயங்கள் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகள் 

இன்று வண்ண வண்ணமாக, டிசைன் டிசைனாக தான் உள்ளாடைகளை விரும்புகிறார்கள். ஆனால், அந்த ஃபேப்ரிக்கில் சேர்க்கப்படும் சாயங்கள், நீங்கள் இறுக்கமாக அணியும் போது, வியர்வையோடு சேர்ந்து வெளியாகும் போது, சருமத்திற்கு பாதிப்புகள் ஏற்படுத்துகிறது. பிறப்புறுப்பு பகுதியில் ஃபங்கஸ் தொற்றுகள் ஏற்பட இது வழிவகுக்கலாம்.

7.. மார்பக கச்சுகள் (Bra) 

அனைத்திலும் ஃபேஷன் எதிர்பார்க்கும் வழக்கம் வந்துவிட்டதால், மார்பகம் மிக கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். இதற்காக இறுக்கமாகவும், மார்பகத்தை எடுப்பாக காட்டும் பிரா அவர்கள் அணிவதால், மார்பகத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படுகிறது. 

இவை எல்லாம் நாள்பட்ட பிறகு தான் அறிகுறிகளை வெளிபடுத்துகிறது என்பதால் பெண்களுக்கு இதை பற்றி தெரியாமலேயே நோய்வாய் படுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!