நெற்றியில் இருக்கும் சுருக்கத்தைப் போக்க இதோ  அட்டகாசமான டிப்ஸ் - ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம்...

Asianet News Tamil  
Published : Feb 02, 2018, 02:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
நெற்றியில் இருக்கும் சுருக்கத்தைப் போக்க இதோ  அட்டகாசமான டிப்ஸ் - ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம்...

சுருக்கம்

Here are some cool tips to cure lines in forehead

நெற்றியில் இருக்கும் சுருக்கம்

** நம்மில் நிறைய பேருக்கு வரிகள் போல சுருக்கங்கள் ஏற்படும். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. வயதாவது ஒரு காரணம்.

** அதை தவிர்த்து இளம் வயதிலேயே சிலருக்கு சுருக்கங்கள் வளரும். மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி நெற்றியை சுருக்குவதால் இது போன்று கோடுகள் உருவாகும். பின்னர் அது அப்படியே நிலைத்திடும்.

** இதனை கடைகளில் விற்கும் க்ரீம்களை கொண்டு நீக்க முயற்சித்தால் சுருக்கங்கள் அதிகமாகிவிடும். நம் வீட்டிலேயே எளிய முறையில் இந்த சுருக்கத்தை போக்கிவிடலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் – 1 தயிர் – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 1டேபிள் ஸ்பூன்

செய்முறை

வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போல் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2- 3 முறை செய்தால் விரைவில் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து, அழகான பிறை போன்ற நெற்றியை பெறுவீர்கள்.

இந்த மூன்றும் சேர்ந்த கலவை நெற்றியில் விழும் விடாப்படியான சுருக்கங்களையும் மறைக்க வைக்கும் ஆற்றல் கொண்டுள்ளவை. அவைகளில் உள்ள தேவையான சத்துக்கள் சருமத்திற்கு போஷாக்கு தருகின்றன.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake