அசைவம் சாப்பிடாமலே எலும்புகளை வலுப்படுத்தலாம்.. இந்த 7 சைவ உணவுகளை சாப்பிட்டால் போதும்..

By Ramya s  |  First Published Aug 14, 2023, 8:19 AM IST

எலும்பை வலுப்படுத்தும் சைவ உணவுகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம். எனவேதான் சில ஆரோக்கிய பழக்கங்களை அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இது எலும்புகளை வலுப்படுத்துவதோடு, உடல் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். ஆரோக்கியமற்ற உணவுகளால் பல வகையான நோய்கள் பரவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடைகிறது. இதற்கு நாம் அத்தகைய உணவுகளை உட்கொள்ள வேண்டும், இது உடலுக்கு ஏராளமான வைட்டமின்களை கொடுக்கும்.

முட்டை மற்றும் இறைச்சி உண்பவர்களுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிதில் பெறுகின்றனர். ஆனால் சைவ உணவு உண்பவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் இந்த குறைபாட்டை சில சைவ உணவுகளும் ஈடுசெய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா? எலும்பை வலுப்படுத்தும் சைவ உணவுகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Latest Videos

undefined

Joint Pain Relief : இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்...உங்க மூட்டு வலி பறந்து போகும்..!!

எலும்புகளை வலுவாக்கும் 7 சைவ உணவுகள்

ராகி: ராகி அல்லது கேழ்வரகு கால்சியத்தின் நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது. ராகியில் செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் எலும்புகள் வலுவடையும். இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதனை உட்கொள்வதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். ராகியில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது. எனவே, அவை இரண்டும் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கின்றன.

கீரை: எலும்புகளின் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக கீரைகள் உள்ளன. எலும்புகளை வலுப்படுத்த கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரையை உட்கொள்வதால் எலும்புகளுக்கு தினசரி கால்சியம் தேவையில் 25 சதவீதம் கிடைக்கிறது. நார்ச்சத்து நிறைந்த இலைகளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

சீஸ்: பாலாடைக்கட்டி அதிக கால்சியம் கொண்ட பால் தயாரிப்பு ஆகும். இதனை உட்கொள்வது எலும்புகள் வலுவிழப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. உங்கள் எலும்புகள் வலுவிழந்தால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் அதன் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். மேலும் பாலாடைக்கட்டியில் புரோட்டினும் அதிகமாக உள்ளது. குழந்தைகள் கூட இதை உட்கொள்ளலாம்.

டோஃபு: டோஃபு வைட்டமின்களுடன் கால்சியத்தின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது உடலில் உள்ள பல ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை நிரப்ப உதவுகிறது. இதை உட்கொள்வதால் உடலுக்கு புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

பால் பொருட்கள் : உங்கள் எலும்புகளை வலுவாக்க விரும்பினால், பால், பனீர், தயிர் போன்ற பால் பொருட்களை உங்கள் தினசரி வழக்கத்தில் அதிகரிக்க வேண்டும். பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது.இதனுடன் பால் பொருட்களில் அதிக புரதச்சத்து உள்ளது.

பாதாம் : பலவீனமான எலும்புகளை குணப்படுத்த பாதாம் பருப்பை சாப்பிடலாம். ஏனெனில் பாதாம் இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. பாதாம் முடி மற்றும் கண்களுக்கும் நல்லது. கால்சியத்துடன், வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் பாதாமில் காணப்படுகின்றன, இது எலும்புகளை வலுப்படுத்துகிறது.

சோயாபீன்ஸ்: ஆரோக்கிய உணர்வுள்ளவர்கள் சோயாபீன்களின் அவசியத்தை நன்கு அறிவார்கள். சோயாபீன்களில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

இதய நோய்களைத் தடுக்க நீங்கள் எத்தனை மணிநேரம் தூங்க வேண்டும்? ஆய்வில் வெளியான தகவல்

click me!