Joint Pain Relief : இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்...உங்க மூட்டு வலி பறந்து போகும்..!!

By Kalai Selvi  |  First Published Aug 12, 2023, 7:17 PM IST

வீட்டில் இருந்தவாறே மூட்டு வலியை எளிய முறையில் குணப்படுத்த உதவும் சில குறிப்புகள் இங்கே..


மூட்டுவலி என்பது இந்த காலத்தில் சாதாரண ஒரு நோயாக மாறிவிட்டது. நம் முன்னோர்கள் காலத்தில் வயதானவர்கள் இப்படி சொல்வார்கள். ஆனால் இப்பொழுது வாலிபர்கள் கூட சொல்ல தொடங்கிவிட்டனர். அதுபோல்  இந்த மூட்டு வலியோடு எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. பொதுவாக மூட்டு வலி வர காரணம் என்னவென்றால், உடல் பருமன், முதுமை, எலும்புகளில் அடிபடுதல் போன்றவை முக்கிய ஆகும். எனவே வீட்டில் இருந்தபடியே, மூட்டு வலியைக் குறைக்க உதவும் எளிய குறிப்பு குறித்து இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கிராம்பு-2
மஞ்சள்-1/2 தேக்கரண்டி
துளசி-10 இலைகள்
இஞ்சி-1/2 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு

Tap to resize

Latest Videos

செய்முறை:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அது பாதியளவு நன்கு சுண்டி வந்தவுடன் அவற்றை ஒரு டம்ளரில் வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் சுவைக்கு தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து எடுத்து வந்தால் மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகள் நாளடைவில் குறையும்.

இதையும் படிங்க:  மூட்டு கை கால் முதுகு இடுப்பு வலி அனைத்தும் நொடியில் காணாமல் போக வேண்டுமா?

மூட்டு வலிக்கு ஆரோக்கியமான உணவுகள்:

நட்ஸ்கள் மற்றும் விதைகள்: 
மூட்டுகளில் இருக்கும் ஜெல் தேய்மானம் ஆகாமல் இருக்க வால் நட், ஆளிவிதைகள் உள்ளிட்டவைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரைகள் மற்றும் காய்கறிகள்: 
எலும்புகள் பலம் பெற கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிகவும் அவசியம். கீரைகள் மற்றும் காய்கறிகள் எலும்புகளுக்கு பலத்தை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக முருங்கை கீரை, கருவேப்பில்லை, வெந்தய கீரை இவற்றை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றில் 400 மில்லி கிராமுக்கும் மேலாக கால்சியம் சத்துக்கள் உள்ளது. மேலும் பாஸ்பரஸ் சத்துக்களும் இதில் உள்ளதால் தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 

எள் உருண்டை:
 அதுபோல் தினமும் சாப்பிட்ட பின் ஒரு எள் உருண்டையை தொடர்ந்து எடுத்து வந்தால் எலும்புகள் தேய்மானம் ஆகாமல் இருக்கும். ஒரு எள் உருண்டையில் சுமார் 1450 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.

பழங்கள்:
மூட்டுகளுக்கு பலம் அதிகரிக்க மெக்னீசியம் சத்துள்ள வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை சாப்பிடுவது நல்லது.

இதையும் படிங்க:  Joint Pain: மூட்டு வலியைத் தடுக்க இந்த ஒரு உடற்பயிற்சியை செய்தால் போதும்!

வைட்டமின் டி:
எலும்புகள் தேய்மானம் ஆகாமல் இருக்க வைட்டமின் டி மிகவும் அவசியம் ஆகும். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. அதுபோல் நாட்டு பசும் பாலில் வைட்டமின் டி உள்ளது. எனவே, இதனை ஒரு டம்ளர் என்ற அளவில் வாரத்திற்கு 2 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

click me!