குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது.. தாய்ப்பால் கொடுப்பதால் இத்தனை நன்மைகளா?

By Ramya s  |  First Published Aug 1, 2023, 1:38 PM IST

புற்று நோய், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வை போக்குவதுடன்,  கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல் பருமனை குறைக்க தாய்ப்பால் உதவுகிறது.


தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். பாதுகாப்பை வழங்குவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை, குழந்தைகளுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. குழந்தைகளுக்கு மட்டுமா? பாலூட்டும் தாய்மார்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. புற்று நோய், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வை போக்குவதுடன்,  கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல் பருமனை குறைக்க தாய்ப்பால் உதவுகிறது.

உலக தாய்ப்பால் வாரம்: புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் நன்மைகளை ஊக்குவிக்கவும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. சரி, தாய்ப்பால் கொடுப்பதால் தாய் மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

Latest Videos

undefined

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2023: நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன?

“தாய்ப்பாலின் தனித்துவமான கலவை ஊட்டச்சத்துக்கள், வளர்ச்சி காரணிகள், ஹார்மோன்கள், நோயெதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தாய்ப்பால் வழங்குகிறது, இயல்பான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, மேலும் நோய்/நோய் அபாயத்தைக் குறைக்கிறது மேலும் இது பெரும்பாலும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கான திரவ தங்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

ஊட்டச்சத்து: முதல் 6 மாதங்களில் குழந்தையின் ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரமாக தாயின் பால் செயல்படுகிறது. இது குழந்தைக்குத் தேவையான வைட்டமின்கள், கொழுப்புகள், புரதங்கள் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. குழந்தைகளால் இதை எளிதில் ஜீரணிக்க முடியும். பிறந்த முதல் சில நாட்களில், சுரக்கும் மஞ்சள் நிற பால் (இது ஊட்டச்சத்து நிறைந்தது. மேலும் ஆன்டிபாடிகளைக் கொண்டுள்ளது. எனவே, அளவு குறைவாக இருந்தாலும், குழந்தைக்கு பலன் கிடைக்கும்.

ஆன்டிபாடிகள்: தாய்ப்பாலில் ஆன்டிபாடிகள் உள்ளன, இது குழந்தைக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே, தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

நோய்த்தொற்றுகளை தடுக்கும்: 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு  காது தொற்று, சுவாச தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது. 

எளிதில் ஜீரணிக்கக்கூடியது: நமது உடல் வெப்பநிலைக்கு ஏற்ப இருக்கும் தாய்ப்பாலின் வெப்பநிலை, குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும்.

பாதுகாப்பு உணர்வு: தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் ஏற்படும் தாய் - குழந்தை இடையேயான கண் தொடர்பு குழந்தைக்கு பாதுகாப்பாக உணர உதவுகிறது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ரத்தக் கசிவைக் குறைக்கிறது: தாய்ப்பால் கொடுப்பதால் கருப்பை சுருங்கி இயல்பு நிலைக்கு வேகமாகத் திரும்பும். இது பிரசவத்திற்குப் பிறகு அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

எடை இழப்பு: தாய்ப்பால் கொடுப்பது என்பது ஆற்றல் மிகுந்த செயல்முறையாகும், ஏனெனில் பால் உற்பத்தி மற்றும் சுரப்புக்கு கூடுதல் கலோரிகள் தேவைப்படுகின்றன. இதன் விளைவாக, கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல் எடை அதிகரிப்பு எளிதில் குறைய வாய்ப்புள்ளது.

நாள்பட்ட நோய்களின் ஆபத்து குறைவு: தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய், பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பு முறிவுகள் ஆகியவை பிற்காலத்தில் ஏற்படும் அபாயம் குறைவு.

மாதவிடாயைத் தடுக்கவும்: "தாய்ப்பால் மாதவிடாய் ஏற்படுவதைத் தடுக்கலாம், ஏனெனில் பால் உற்பத்திக்குத் தேவையான புரோலேக்டின் ஹார்மோன் கருமுட்டை வெளியேறுவதை நிறுத்துகிறது. மாதவிடாய் வராமல் தடுக்கிறது. நீங்கள் உங்கள் குழந்தைக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுத்தால், உங்கள் முதல் மாதவிடாய் பல மாதங்கள் அல்லது 1-2 வருடங்கள் வராமல் போகலாம். இது கர்ப்பத்திற்கு இடையில் போதுமான நேரத்தை உறுதி செய்வதற்கான இயற்கையின் வழியாகும்.

உலக தாய்ப்பால் வாரம் 2023: தேதி, வரலாறு & முக்கியத்துவம் என்ன?

click me!