Ghee: யாரெல்லாம் உணவில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்: கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!

By Dinesh TG  |  First Published Nov 8, 2022, 5:10 PM IST

ஆரோக்கியமான கொழுப்புச்சத்தைக் கொண்ட நெய். நம்மில் பலருக்கும் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளும் பழக்கம்  உள்ளது.


சுவையான உணவை தான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால், உணவில் சுவையைக் கூட்டுவதற்கு பலரும் பல்வேறு உணவுப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான், ஆரோக்கியமான கொழுப்புச்சத்தைக் கொண்ட நெய். நம்மில் பலருக்கும் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளும் பழக்கம்  உள்ளது.

உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல்

Latest Videos

undefined

உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. அதோடு கேன்சர் மற்றும் வைரஸ் தொற்று போன்ற ஆபத்தான நோய்களை தடுக்கிறது.

நெய்யை நன்றாக உருக்கி, சூடான சாப்பாட்டில் சேர்த்து, கலந்து சாப்பிட வேண்டும். இதுபோல் நெய்யை உருக்கி சாப்பிடுவதனால், உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, உஷ்ணத்தை தணிக்கிறது.

யாரெல்லாம் நெய் சேர்த்துக் கொள்ளலாம்

வாய்வுக் கோளாறு இருப்பவர்களுக்கும், உணவில் அதிகளவு காரத்தை சேர்த்துக் கொண்டவர்களுக்கும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் குடல் புண்ணாகி விடும். இதன் காரணமாக வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவிதமான நாற்றம் வீசும். இவர்கள் அனைவரும் உணவில் நெய் சேர்த்து தினந்தோறும் சாப்பிட்டால், குடலின் உட்புறச் சுவர்களில் இருக்கும் புண்கள் அனைத்தும் ஆறுவதுடன், குடல் சுரப்பிகளும் பலமடையும்.

Cervical Cancer: பெண்களே உஷார்: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வருமுன்னரே எப்படித் தடுக்கலாம்?

யாரெல்லாம் நெய் சேர்க்க கூடாது

உடல் பருமனாக இருப்பவர்களும், இதய நோய் பாதிப்பு உள்ளவர்களும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லதல்ல. ஒருவேளை நெய் சேர்த்துக் கொண்டால், கொழுப்பின் அளவு அதிகரித்து அவர்களுக்கு தீங்கை விளைவிக்கும். 

பலன்கள்

நோய் பாதிப்பு எதுவுமே இல்லாதவர்கள், எந்த பயமும் இன்றி தினந்தோறும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ள ஆட்சேபனை இல்லை. மதிய வேளையில் உண்ணும் முதல் சாதத்தில், சிறிது நெய் சேர்த்து உண்பதால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. அதோடு உஷ்ணத்தையும் குறைக்கிறது. மேலும் மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள் மற்றும் சொறி போன்ற நோய்களும் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீங்கும். 

click me!