உடலில் சிறுநீரை சேகரிக்க உதவும் சிறுநீர்ப்பை எலாஸ்டிக் போல விரிவடையும் தன்மை கொண்டது. நாம் வளர வளர அதனுடைய இலகு தன்மை மாறி இறுக்கமாகும்.
உடலில் சேரும் திரவ வடிவிலான கழிவுகள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடுவது வழக்கம். இதனால் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். ஆரம்பத்தில் எலாஸ்டிக் போன்று மிகவும் விரிவடையும் தன்மையுடன் சிறுநீர்ப்பை இருக்கும். நாம் வளருவதற்கு ஏற்ப, அது இறுக்கமாகி வரும். அதனால் அடிக்கடி தண்ணீர் குடிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளவது, இறுக்கமான துணிகளை அணியாமல் இருப்பது போன்றவை சிறுநீர்ப்பை நலனை காக்க உதவும். குறிப்பிட்ட சில விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், இதுசார்ந்த உடல்நலன் பிரச்னைகள் எதுவும் வராது.
சிறுநீரை அடக்கக்கூடாது
undefined
இன்றைய காலத்தில் பலரும் உடல் இயக்கத்தற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இருக்கையில் இருந்து எழுந்து கழிவறைக்கு செல்வதற்கே சோம்பலாக உணர்கின்றனர். இப்படி சிறுநீரை அடக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தால், அது சிறுநீர்ப்பையை பலவீனமாக்கிவிடும். அதனுடைய தன்மையை மாற்றி எப்போது சிறுநீர் வந்தாலும் உடனடியாக வெளியேற்றத் தூண்டும். மேலும் சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்திருந்தால், அது பல்வேறு சிறுநீரகம் சார்ந்த தொற்றுக்கு வழிவகுக்கும். குறைந்தது 3 மணிநேரத்துக்கு ஒருமுறை, தனிநபர் சிறுநீர் கழிக்க வேண்டும்.
அருவறுப்புப் பட ஒன்றுமில்லை
ஒருசிலருக்கு கழிவறைக்கு சென்றவுடன் வெளியே வந்துவிட வேண்டும். இதனால் எல்லாவற்றையும் அவசர அவசரமாக செய்வார்கள். அவசரமாக சிறுநீர் கழித்துவிட்டு ஓடுவது அல்லது முழுமையாக சிறுநீர் கழிக்காமல் சென்றுவிடுவது போன்றவை இவர்களுடைய பிரச்னையாக இருக்கும். பாத்ரூம் செல்வதற்கு இவ்வளவு அருவறுப்பு தேவையில்லை. முடிந்தவரை கழிவறையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யுங்கள். பொறுமையாக சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வாங்கள். இது சிறுநீர்ப்பை ஆரோக்கியத்துக்கும் உதவும்.
சுத்தம் மிகவும் முக்கியம்
நீங்கள் எப்போது சிறுநீர் கழித்தாலும், பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். இது ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பொருந்தும். ஆனால் பெண்களுக்கு கூடுதலாக, பிறுப்புப்பின் முன் மற்றும் பின்பகுதிகளை சேர்த்து சுத்தப்படுத்த வேண்டும். இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படும். நுண்கிருமி பாதிப்புகளில் இருந்து உங்களை காப்பாற்றும். அதனால் ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழித்த பிறகு, உங்களுடைய பிறப்புறுப்பு பகுதியை நன்றாக சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
கத்திரிக்காய் என்னும் அற்புத காய்- இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..!!
உடலுறவுக்கு பிறகும் சுத்தம் செய்வது நல்லது
உடலுறவுக்கு பிறகும் சிறுநீர் கழித்து, பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். உடலுறவு காரணமாக உங்களுடைய குடல் ஆரோக்கியம் மற்றும் சிறுநீர்பாதையை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது முக்கியம். நீங்கள் சுத்தமாக பராமரிக்கவில்லை என்றால், அதுகாரணமாக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழித்திடுங்கள். அதையடுத்து பிறப்புறுப்புப் பகுதிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்திடுங்கள். இது ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பொருந்தும். இந்த பழக்கம் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படாமல் உங்களை பாதுகாக்கும்.
சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து கொப்பளித்தால் உடலுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
இறுக்கமான துணிகள் வேண்டாம்
உங்கள் உடலுடன் ஒட்டிய பகுதிகளில் மிகவும் இருக்கமான துணிகளை அணியாதீர்கள். குறிப்பாக பிறப்புறுப்பு சார்ந்த இடங்களில், சற்று காற்றோட்டமான ஆடைகள் அணிவது நல்லது. அழகுக்காக உடலை ஒட்டிய துணிகளை பலரும் அணிகின்றனர். ஆனால் அதனால் உடல்நலன் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சற்று காற்று உட்புகும்படியான ஆடைகளை அணிவது நுண்கிருமி தொற்று ஏற்படாமல் தடுக்கும். அதிக வெப்பமண்டல பகுதிகளில் வசிப்பவர்கள், இலகுவான ஆடைகளை அணிவது நல்லது. இதனால் பிறப்புறுப்பு பகுதிகளில் நுண்கிருமிகள் வளராமல் தடுக்கும்.
மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் மட்டுமின்றி, செயற்கையான சுவையூட்டி கொண்ட உணவுகளை சாப்பிடுவது, சோடா குடிப்பது போன்றவையும் சிறுநீர்ப் பாதையில் பிரச்னையை அதிகரிக்கும். எப்போதும் அதிகமாக தண்ணீர் குடியுங்கள். இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்படும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, உடலை எப்போதும் இயக்கத்துடன் வைத்துக்கொள்வது போன்றவை சிறுநீர்ப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.