உடலுறவுக்கு வாசனையுடன் கூடிய ஆணுறைகளை பயன்படுத்துவதால் பெண்ணுறுப்பு பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இன்று அதிகம் பயன்படுத்தப்படும் கருத்தடை முறைகளில் ஆணுறையும் ஒன்று. பாதுகாப்பான உடலுறவு ஏற்படுவதன் மூலம், நோய்த்தொற்றுகள் பரவுவது தவிர்க்கப்படுகிறது. குழந்தைபேறுக்கு திட்டமிடாத தம்பதிகள் பொருத்தமான கருத்தடை முறைகளை கையாளுகின்றனர். ஆணுறைகளை சரியாக பயன்படுத்தி உறவுகொள்வதன் மூலம், 96% முதல் 98% வரை பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வாய்வழி உடலுறவின் போது ஆண் ஆணுறைகள் மற்றும் பல் அணைகளைப் பயன்படுத்துவதை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால் பாலுறவு மூலம் பரவும் நோய்த்தொற்று எதுவும் ஏற்படாது. ஒருவேளை அதை செய்ய தவறினால், கேண்டிடியாசிஸ், ஹெர்பெஸ், சிபிலிஸ், கோனோரியா, ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட நோயாளிகள் ஏற்பட காரணமாக அமையும்.
ஆணுறையுடன் கூடிய பாதுகாப்பான உடலுறவு என்பது, பாலுறவு நோய்கள் பரவுவதை மட்டுமில்லாமல் பாலியல் இன்பத்தையும் அதிகரிக்கிறது. அதிலும் இன்று ஆணுறைகள் சாக்லேட், வெண்ணிலா, ஸ்ட்ராபெரி முதல் இஞ்சி மற்றும் பூண்டு என பல்வேறு சுவைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுபோன்ற ஆணுறைகளை பயன்படுத்தி உறவுகொண்டால், பெண் உறுப்பில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
காரணமே இல்லாமல் கணவன் பிரிந்துவிட்டால்- மனைவி சட்டப்படி என்ன செய்யலாம்?
உடலுறவுக்கு வாசனை இல்லாத வழக்கமான ஆணுறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது நிபுணர்களின் கோரிக்கையாகும். வாசனை ஆணுறைகளைப் பயன்படுத்துவது பிறப்புறுப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இது யோனியில் உள்ள pH அளவை பாதிக்கிறது. இதுதவிர ஒருசிலருக்கு வாசனையூட்டப்பட்ட காண்டத்தில் இருக்கும் ரசாயனத்தால் புற்றுநோய் பாதிப்புக் கூட ஏற்படுவதாக துறைச் சார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
எப்போதும் ஆணுறை வாங்கினாலும், அதை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. அதேபோல பயன்படுத்தி முடித்தவுடன், அதை பாதுகாப்பான முறையில் தூக்கி எறிய வேண்டும். சூடான பகுதிகளில் காண்டத்தை ஸ்டோர் செய்யக்கூடாது. ஆணுறை வெளுத்துப் போனது போல இருந்தாலோ அல்லது கிழிந்திருந்தாலோ அதை பயன்படுத்தக்கூடாது. ஆணுறைகள் சிலநேரம் கிழிந்திருக்கும். வாங்கும்போது அதை சரிபார்க்க வேண்டும்.