வெந்நீர் அல்லது குளிர்ந்த தண்ணீரில், எதில் குளித்தால் நன்மை அதிகம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்திற்கு மழைக்காலம் துவங்கிவிட்டது. அதையடுத்து குளிர்காலம் வரப்போகிறது. அதனால் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை பலரும் சுடு தண்ணீரில் தான் குளிப்பார்கள். வெந்நீரில் குளிப்பது உடல்நலனுக்கு பாதுகாப்பானதா என்கிற கேள்வி பலரிடையே நிலவுகிறது. வெறும் பச்சைத் தண்ணீரில் குளிக்கும் போது உடல் புத்துணர்ச்சி அடைவதாகவும், அதே வெந்நீரில் குளிக்கையில் சருமம் உறைந்துவிடக் கூடும் மற்றும் உடல் உறுப்புகளுக்கு பிரச்னை ஏற்படும் என்று பலரும் கருதுகின்றனர். இதனால் வெந்நீர் அல்லது குளிர்ந்த தண்ணீரில், எதில் குளித்தால் நன்மை அதிகம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
தசைப் பிடிப்புக்கு ரிலாக்ஸ் கிடைக்கும்
குளிர்ந்த நீரில் குளிப்பது அல்லது வெந்நீரில் குளிப்பது என இரண்டிலேயே நன்மை உள்ளது. ஆனால் தசைப் பிடிப்பால் அவதிப்படுவோருக்கு வெந்நீரில் குளிப்பது நன்மையை தரும். அதேபோன்று பலருக்கும் ஏ.சி குளிர் ஒத்துக்கொள்ளாமல் இருமல், தும்மல் போன்ற பிரச்னைகள் வரும். அப்படிப்பட்டவர்கள் வெந்நீரில் குளிப்பதன் மூலம் பிரச்னை நீங்கும்.
உடலில் ஏற்படும் அழுத்தம் நீங்கும்
அதிகமாக வெளியில் சுற்றுவிட்டு, ஓய்வெடுக்கும் போது ஏ.சியை பயன்படுத்துகிறோம். ஆனால் அதேசமயத்தில் மீண்டும் வெளியே சென்று வேலை செய்யவேண்டியதாக உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் உடல்நலப் பிரச்னைகள் சில ஏற்படக்கூடும். அப்போது உடலுக்கு ஒருவித அழுத்தம் ஏற்படும். அதைப் போக்க சூடான நீரில் குளித்தால் உடல்நலன் பாதிக்காது.
நரம்பு அழற்சி இருக்காது
பல பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது, உடல் வேதனை ஏற்படும். அப்போது சூடான நீரில் குளிப்பது உடலுக்கு இதமாக இருக்கும். அதேபோல நரம்பு அழற்சி பிரச்னை இருப்பவர்கள் சூடான தண்ணீரில் குளித்து வருவது தீர்வாக அமையும். அதேபோன்று சருமத்தில் படியும் அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை நீக்கிட, குளிர்ந்த நீரை விட வெந்நீரே நல்ல பயனை தரும்.
ஒற்றைத் தலைவலி ஓடி விடும்
பலருக்கும் ஒற்றைத் தலைவலி தீராத பிரச்னையாக உள்ளது. குறிப்பாக கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர், போன்களை அதிகமாக பார்ப்பவர்கள், நீண்டநேரம் புத்தகம் படிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு ஒற்றைத் தலைவலி எளிதில் வந்துவிடுகிறது. அதைபோக்க சூடான தண்ணீரில் குளித்து வரலாம். அதேபோல நாள்பட்ட தலைவி பிரச்னையும், சூடான தண்ணீரில் குளித்து வருவதன் மூலம் குணமடையும்.
வாட்டர்பாட்டில் போட்டு வாஷிங் மெஷினில் துணி துவைத்து பாருங்க- அற்புதம் நடக்கும் நம்புங்கள்..!!
குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் பருமன் கொண்டவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் எடை குறைய வாய்ப்புள்ளது. அதேபோல உடலில் குளுக்கோஸ் உறிஞ்சுதல் அதிகரித்து, சக்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கும். அதேபோல அதிகளவு வெளியில் சுற்றிவிட்டு, வீட்டுக்கு வருபவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியைத் தருகிறது. அதேபோன்று நம் நாட்டுத் தட்பவெட்ப நிலைக்கு சூடு தண்ணீரை விட, குளிர்ந்த நீரில் குளிப்பதில் நன்மை பல உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.