எந்த வாழைப்பழம் உடலுக்கு ஆரோக்கியம் தரும்? பழுத்த வாழைப்பழமா? பழுக்காததா? 

First Published Jun 22, 2018, 4:27 PM IST
Highlights
Which bananas are healthy for the body? Ripe banana or fruit banana


பழுத்த வாழைப்பழம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சில நம்புகின்றனர்.

அதேவேளை இன்னும் சிலர் பழுத்த வாழைப்பழத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்கின்றனர். 

இதில் எதை நம்புவது என்று தெரியலையா? தெரிஞ்சுக்க தொடர்ந்து வாசிங்க...

பழுத்த வாழைப்பழம் சிறந்ததா? அல்லது பழுக்காத பழம் சிறந்ததா? என்று அறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

அதில், பழுத்த பழம் பழுக்காத பழத்தைவிட நார்ச்சத்து மிகுந்த ஆகாரமாகவும், விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தும் காணப்பட்டது.

பழுத்த வாழைப்பழமானது பழுக்காத வாழையை விட அதிக விட்டமின்களையும், புரோட்டீன்களையும், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் உருவாக்குகிறது. 

பெரும்பாலும் நன்கு பழுத்த வாழைப் பழங்களின் மீது கரும்புள்ளிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்த கரும்புள்ளிகள் டியூமர் நேசிரோசிஸ் பாக்டர் எனப்படும் ஒரு வேதிப்பொருளை வாழைப்பழம் உருவாக்குகிறது.

இது உடம்பிலுள்ள அசாதாரணமான மற்றும் கேன்சர் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் ஒரு கப் பழுத்த வாழைப்பழம் குறைந்தது சுமார் ௦.55 மிலிகிராம் அளவு விட்டமின் பி6 கொண்டுள்ளது. இது ஒரு வளர்ந்த மனிதனுக்கு ஒரு நாலைக்குத் தேவைப்படும் விட்டமின் பி6 அளவில் 42 சதவிகிதம் ஆகும்.

பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் 

** தொடர்ந்து பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டுவருவது ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

** ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது.

** பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி (ஆஸ்டியோ போரோசிஸ்) மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

** பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் இதைத் தவிர பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

** பழுத்த வாழைப்பழத்தின் நன்மைகள் பழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும் கூடத் தடுக்கும்.

** தினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.
 

click me!