ஆண், பெண் என பாரபட்சம் பார்க்காமல் தாக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று; அதற்கு தீர்வும் உண்டு..

First Published Jun 22, 2018, 4:20 PM IST
Highlights
medical cure for foot cracks


ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாத வெடிப்பு பிரச்சனைக்கான கை வைத்திய முறைகள் இதோ.. 

பாத வெடிப்பு

பாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும். இதை பித்த வெடிப்பு என்றும் சொல்வது வழக்கம்.

1.. பாதவெடிப்புக்கான முதல் மருந்து 

இஞ்சி, சீரகம், தனியா, பனங்கற்கண்டு. செய்முறை: இஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். 

வடிக்கட்டி இந்த தேனீரை குடித்துவர ரத்தத்தை சீர்செய்யும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்துகிறது. தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும்.

2.. பாதவெடிப்புக்கான இரண்டாவது மருந்து 

குப்பைமேனி, விளக்கெண்ணெய், மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும். பாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களைஅழிக்கும்.

3.. பாதவெடிப்புக்கான மூன்றாவது மருந்து 

அத்திமரப்பட்டை, புங்கமரப்பட்டை ஆகியவற்றை துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்து பொடியாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள், புங்க எண்ணெய் சேர்த்து கலந்து பூசிவர பாதவெடிப்பு சரியாகும்.

4.. பாத வெடிப்புக்கான நான்காவது மருந்து 

மஞ்சள் பொடியுடன் சிறிது சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து பாதவெடிப்பு உள்ள இடத்தில் இரவு நேரத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து காலையில் கழுவிவர பாதவெடிப்பு சரியாகும். வெடிப்பு மாறி தோல் மென்மையாகிறது. பாதம் அழகு பெறும். சுண்ணாம்பு பாதவெடிப்புக்கு மருந்தாகிறது. பாதவெடிப்புகான இந்த மருந்துகளை பயன்படுத்தும் முன்பு இளம்சூட்டில் பாதங்களை நன்றாக கழுவ வேண்டும்.
 

click me!