
உணவுகளின் மூலம் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். இங்கு சர்க்கரை நோய்க்கு தீர்வு காண உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
அவற்றை சாப்பிட்டு 30 நாட்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
கேரட்
கேரட்டினை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலினை சீராக சுரக்க உதவும்
மீன்
மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இது இன்சுலினை சீராக சுரக்க உதவும். எனவே வாரம் 2 முறை உணவில் மீன் சேர்த்து வருவது, சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆலிவ் ஆயில்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆலிவ் ஆயிலை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில்
ஆரஞ்சு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
பாதாம்
பாதாம் நீரிழிவு நோயாளிகளின் நண்பன் எனலாம். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன், அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, இன்சுலின் அளவை சீராகப் பராமரிக்க உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் அன்றாடம் சிறிது பாதாமை உட்கொண்டு வருவது நல்லது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரையில் உள்ள ஏற்றத்தாழ்வையும் குறைக்கலாம்.