கால்வலி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்…

 
Published : Sep 20, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
கால்வலி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்…

சுருக்கம்

When you know and do not know about the kale ...

கால்வலி வருவதற்கான காரணங்கள்

கால்வலி என்ற சொல் நாம் அடிக்கடி பலர் சொல்ல கேட்கும் சொல். மூட்டுக்களினால் ஏற்படும் வலி மிக அதிகமாக காணப்படுகின்றது. என்றாலும் கால் வலிக்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்பதால் இதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவில் இடுப்பிலிருந்து, பாதம் வரை எங்கு வலி ஏற்பட்டாலும் கால் வலி என்றுதான் மக்கள் வழக்கமாகச் சொல்வார்கள். ஆனால் இக்கட்டுரையில் நாம் இடுப்பு, பாதம் இதனை தவிர்த்து தொடை மடிப்பு முதல் கணுக்கால் வரையான வலியினைப் பார்ப்போம்.

வலி என்பது கூராகா, மந்தமாக, மரத்து குறுகுறுப்பாக, எரிச்சலாக, வலியாக இருக்கலாம். இந்த வலி திடீரென வந்து குறுகிய காலமாக அல்லது நீண்டகாலமாக அனுபவிக்கும் வலியாக இருக்கலாம்.

நரம்புகள் தான் நாம் அனுபவிக்கும் வலிக்கு காரணம். இந்த நரம்புகள் அதிக அழுத்தம், அதிக அல்லது குறைந்த உஷ்ணம், திசுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ரசாயணங்கள் இவற்றினை காரணமாக ஏற்படலாம்.

* இடுப்பு முதல் குதிகால் வரை கால் வலி என்கிறோம்.

* பொதுவில் அடிபடுதல் குறிப்பாக விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகள் வலிக்கு காரணம் ஆகின்றன.

* வெளிப்பக்கத்திலுள்ள ரத்த குழாய்கள் பாதிப்பினாலும் வலி ஏற்படலாம்.

* காலுக்கு அதிக உழைப்பு, விளையாட்டு பயிற்சி அதிகம் சுளுக்கு, எலும்பு முறிவு ஆகிய காரணங்களால் வலி ஏற்படலாம்.

* நரம்பு பாதிப்பு, ரத்த குழாய் பாதிப்பு, சதைகள் பாதிப்பு, எலும்பு பாதிப்பு காரணமாக கால் வலி ஏற்படலாம்.

* சாதாரண கால் வலி சிறிய கவனிப்பிலேயே சரியாகி விடும்.

* அதிக ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் காலின் அதிக உழைப்பு காரணமாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

* கால்களில் ஒரு குறுகுறுப்பு, சவுகர்யமின்மை போன்ற பாதிப்பு ஏற்படலாம். இதனை கால்களின் அமைதியின்மை என்கிறோம். குறிப்பாக படுக்கும் பொழுது இந்த பாதிப்பு அதிகம் தெரிவதால் பாதிப்பு உடையவருக்கு தூக்கமின்மை இருக்கும்.

ஆடுதசையில் ஏற்படும் பிடிப்பு அநேகருக்கு இரவில் ஏற்படும். தசையினை இறுக்க பிடித்ததுபோன்ற ஒரு உணர்வு இருக்கும். அதிக வயது கூடியவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும். பொதுவில் இதற்கு மருத்துவ கவனிப்பு என்று அதிகம் சொல்வதில்லை.

சில நிமிடங்களில் தானே சரியாகி விடும். ஆனால் உடலில் நீர் பறருமை, குடி இவற்றில் ஏற்படும் பாதிப்பிற்கு மருத்துவ உதவி அவசியம். தேவையான அளவு நீர் குடிப்பதும் தீர்வாக அமையும். சிலருக்கு தொடர்ந்து இந்த தசைப்பிடிப்பு ஏற்படும் பொழுது சில மருந்துகளை மருத்துவர்கள் சிபாரிசு செய்வர்.

சில மருந்துகளும் இத்தகைய பிடிப்பினை ஏற்படுத்தும் என்பதால் அதனையும் மருத்துவரிடம் கூறி ஆலோசனை பெறுதல் அவசியம்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க