
சர்க்கரை நோயின் பாதிப்புகள் ஆபத்தாக இருக்கும் என்பதால் இன்று இன்சுலின் போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகின்றது.
தேவை என்று வரும் பொழுது அனைவரும் இதனை முறையாய் கற்றுக் கொண்டு விடுகின்றனர். என்றாலும் சில நேரங்களில் முறையான அளவு இல்லாமல் கூடுதலாக எடுத்துக் கொள்வதால் ஆபத்தான நிலைக்கு கொண்டு விட்டு விடுகின்றது.
* சாப்பிடும் முன் அவர்கள் சர்க்கரையின் அளவு
* அவர்கள் எடுத்துக் கொள்ளும் கார்போஹைடிரேட்டின் அளவு
* அவர்களின் அன்றாட உழைப்பின் அளவு
இவைகளைக் கொண்டே மருத்துவர் ஒருவரின் இன்சுலின் தேவையினை முடிவு செய்கின்றனர்.
இன்சுலின் வேலை சர்க்கரையை எரித்து சக்தியாக மாற்றுவதாகும். தவறுதலாக அதிக இன்சுலின் எடுத்துக் கொண்டால் திடீரென சர்க்கரையின் அளவு அதிகம் ரத்தத்தில் குறைந்து விடும்.
நீரிழிவு நோயாளிகளுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி சர்க்கரை அளவு ரத்தத்தில் குறைவது மிகுந்த ஆபத்தில் கொண்டு விடும். ஆகவே இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் சிறு சந்தேகம் கூட இல்லாது இன்சுலின் போட்டுக் கொள்ளும் முறையினை அறிவது மிக மிக அவசியம்.
இன்சுலின் அதிகமாக எடுத்துக் கொண்டுவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்.
* குழப்பம்
* எரிச்சல்
* படபடப்பு
* உடல் நடுக்கம்
* மயக்கம்
* அதிக இருதய துடிப்பு
* பார்வை கோளாறு
* அதிக வியர்வை
இது[போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவினை பரி சோதிக்க வேண்டும். மருத்துவர் உதவியும் மிக மிக அவசியம்.
இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள் அதற்கான உரிய நேரத்தில் முறையான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.