கண்நோய்கள் வரமால் தடுக்க என்னவெல்லாம் பண்ணலாம்; இதோ டிப்ஸ்…

 
Published : Jun 16, 2017, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
கண்நோய்கள் வரமால் தடுக்க என்னவெல்லாம் பண்ணலாம்; இதோ டிப்ஸ்…

சுருக்கம்

What can be done to prevent eye diseases? Here are tips ...

1.. கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை யில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக் கூடாது.

2.. அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.

3.. ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.

4.. கணினியில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது. அவ்வப்போது குறைந்தது 5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.

5.. உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.

6.. எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7.. மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

8.. உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

9.. தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

10.. மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

11.. அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.

12.. நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க