
குதிரைவாலியில் இருக்கும் சத்துகள்
புரதம் - 6.2 கிராம்,
கொழுப்பு - 2.2 கிராம்,
தாதுக்கள் - 4.4 கிராம்,
நார்ச்சத்து - 9.8 கிராம்,
மாவுச்சத்து - 65.5 கிராம்,
ஆற்றல் - 307 கிலோ
கலோரிகள், கால்சியம் - 20 மி.கி.,
பாஸ்பரஸ் - 280 மி.கி.,
இரும்புச் சத்து - 5.0 மி.கி.
1.. அரிசி சாதத்துக்குப் பதிலாக மதிய உணவுக்கு சமைக்கலாம். ஒரு பங்கு குதிரைவாலிக்கு 2 பங்கு அல்லது 2 1/4 பங்கு தண்ணீர் ஊற்றி நேரடியாகவே பாத்திரத்தில் வேக வைக்கலாம். பிரஷர் குக்கர் தேவையில்லை. சீக்கிரம் வெந்து விடும்.
2.. காய்கறிகளை வதக்கி வெஜிடபிள் உப்புமா செய்தால் மிக ருசியாக இருக்கும். கொஞ்சமாக எண்ணெய் விட்டால் போதும். கீரை, காளான், சோயா போன்றவற்றுடனும் சேரும். சாலட் / தயிர் பச்சடியில் மற்ற காய்கறிகளுடன் இதை வேக வைத்துச் சேர்க்கலாம்.
3.. காய்கறிகளுடன் இதையும் சிறிதே சூப்பில் போடும் போது வயிறு நிறையும். எடை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள் இதைப் போல வாரம் 3 முறை அருந்தலாம்.
4.. காலை உணவான இட்லி, தோசை, பணியாரம், ரொட்டி, பொங்கல் போன்றவற்றையும் குதிரைவாலி கொண்டு தயாரிக்கலாம். சத்துமாவாகத் தயாரித்து கஞ்சி, கூழ் காய்ச்சி பெரியவர் முதல் குழந்தைகள் என எல்லோருக்கும் ருசியாகத் தரலாம். குதிரைவாலியை வறுத்து, ஒரு பங்குக்கு ஏதாவது ஒரு பருப்பு / பயறு கால் பங்கு வறுத்துச் சேர்த்து பொடி செய்யலாம். பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை சேர்க்கலாம்.
5.. மற்ற முளைகட்டிய தானியங்களோடு வறுத்து ‘மால்ட்’ செய்யும் போதும் சேர்க்கலாம். இதில் தயிர் சாதம் போல தாளித்து கலந்தால் மிக ருசியாக இருக்கும். அதிக சத்துகள் சேர துருவிய கேரட், கிஸ்மிஸ், திராட்சை, மாதுளை முத்து, கொத்தமல்லி கலந்து தரலாம்.
6.. பிரியாணி, புலாவ், கலவை சாதங்கள், சாம்பார் சாதம் செய்தால் மிக ருசியாக இருக்கும்.சர்க்கரைப் பொங்கல், அல்வா, லட்டு, அதிரசம் போன்ற பலவித தென்னிந்திய இனிப்புகள் செய்யலாம்.
7.. பிஸ்கெட், கேக், மஃபின்ஸ் போன்றவற்றில் கோதுமை மாவுடன் சம அளவு குதிரை வாலி மாவு கலந்து செய்யலாம்.
ஆரோக்கியத்துக்கு உகந்தது. மேலைநாட்டு உணவுகள் பலவற்றை நாமும் குதிரைவாலி பயன்படுத்தி ருசியாக சமைக்க இயலும்.