மூட்டுவலியில் என்னென்ன வகைகள் இருக்கு? மூட்டுகளை வலுவாக்கும் உணவுகள் என்ன? ஒரு அலசல்…

Asianet News Tamil  
Published : Mar 30, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
மூட்டுவலியில் என்னென்ன வகைகள் இருக்கு? மூட்டுகளை வலுவாக்கும் உணவுகள் என்ன? ஒரு அலசல்…

சுருக்கம்

What are types of arthritis What Foods strengthens joints A gadget

மூட்டுகள்

மனித எலும்புகளின் கட்டமைப்பில் எலும்புதான் உடலுக்கு வடிவமும் பலமும் அளிக்கிறது. பிறக்கும்போது 300 எலும்புகளாக இருக்கும் இவை, வயது கூடக் கூட 206-ஆகக் குறைகின்றன.

மெனிஸ்கஸ் கிழிதல் அல்லது குருத்தெலும்பு தசை கிழிதல்

மெனிஸ்கஸ் கிழிதல், பொதுவாகப் பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை. இதற்குப் பொதுவான அறிகுறிகளோ, பிரச்னைகளோ தெரிவதில்லை. ஒரு சிலருக்கு வலி அல்லது நொறுங்கும் சத்தமோ, உணர்வோ ஏற்படலாம். இதன் பாதிப்பு அதிகரிக்கும்போது வீக்கமும் வலியும் ஏற்படும்.

முழங்காலை நீட்டும்போது அதிக வலி தோன்றும். பாதிப்பின் நிலையைப் பொறுத்து இதற்கான சிகிச்சையும் மருந்துகளும் மாறுபடும். முழங்கால் பாதிப்புகளை ஆய்வுசெய்ய, உடல் பரிசோதனையோடு நோயாளியின் மருத்துவ வரலாறும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

ஆர்த்ரிட்டிஸ்

மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், ஆர்த்ரிட்டிஸ் குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வலி உண்டாகும். சில சமயங்களில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு, மூட்டுகளை அசைக்க முடியாத நிலைகூட வரலாம். ஆர்த்ரிட்டிஸின் அறிகுறிகள், அதன் வகைகளைப் பொறுத்து, (ரூமட்டாய்டு, ஆஸ்டியோ ஆர்த்ரிட்டிஸ் மாறுபடும்.

பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு தேயத் தொடங்குகிறது. இதுதான் மூட்டுகளுக்கு இடையில் உள்ள இடத்தைச் சுருக்கி, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்படக் காரணமாகிறது.

எலும்புகளை வலுவாக்கும் உணவுகள்…

பால்

தொடர்ச்சியாகப் பால் அருந்திவந்தால், முழங்கால் மூட்டில் ஏற்படும் ஆர்த்ரிட்டிஸ் அதிகரிக்காமல் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாலில் அனைத்துச் சத்துக்களும் இருக்கின்றன. எனவே, வயதானவர்களின் தினசரி உணவில் பால் கட்டாயமாக இடம்பெற வேண்டும். தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்திவந்தால், பெண்கள் முழங்கால் மூட்டு சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

சோயா பனீர்

சோயா பனீர், சோயாபீன்ஸ் தயிரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது, இயற்கையாகவே க்ளுட்டன் சத்து இல்லாமல், குறைந்த கலோரிகொண்ட உணவாக இருக்கிறது. புரதம், இரும்பு மற்றும் கால்சியம் சத்து நிறைந்தது. சோயா பாலை கொதிக்கவைத்து திரித்தால், கால்சியம் நிறைந்த சோயா பனீர் கிடைக்கும். சோயா ஐஸோஃபிளேவான் (Soya Isoflavone) எலும்புத் தேய்மானத்தைக் குறைத்து, தாதுச் செறிவை மெனோபாஸ் சமயத்தில் அதிகப்படுத்தும்.

எள்

எள்ளில் தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் (Molybdenum) ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்கி, முடக்கு வாதத்தையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் அடிப்படையாக அமையும் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை (Elastin) இணைக்கும் பணியை எள்ளிலுள்ள தாமிரம் செய்கிறது.

கீரை

கீரை வகைகளில் எலும்பை பலப்படுத்தும் கால்சியம், தாதுக்கள், வைட்டமின் கே, ஃபோலேட், வைட்டமின்- சி நிறைந்துள்ளன.

பீன்ஸ்

பீன்ஸில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது, எலும்புகளை உறுதியாக்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake