இயற்கை மனிதருக்கு கொடுத்த வரப்பிரசாதம் பாகற்காய்

First Published Mar 30, 2017, 1:23 PM IST
Highlights
Natures boon to human bitter gourd


நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் ஒரு அருமருந்து பாகற்காய்.

இயற்கை வரப்பிரசாதமான பாகற்காயின் மருத்துவ குணங்கள்:

1.. ஒரு பிடி பாகற்காயின் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

2.. பாகற்காயின் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இப்படி மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3.. பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும்.

4.. பாகற்காயின் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும்.

5.. பாகற்காயின் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

6.. ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர நீரழிவுக்குக் குணம் ஆகும்.

7.. சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

click me!