Liver Damage Symptoms: உள்ளங்கால் அரிக்குதா? பாதம் சூடா இருக்குதா? அப்படின்னா கல்லீரல் கோளாறுதான்!!

By Dhanalakshmi G  |  First Published Sep 20, 2023, 2:41 PM IST

உடல் உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். எவ்வாறு உடலுக்கு இருதயம், மூளை முக்கியமோ அதேபோல் மனித உடலுக்கு கல்லீரல் முக்கியம். கல்லீரல் பாதிக்கப்பட்டால், மொத்தம் உடலும் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள் என்னென்ன என்று அறிந்து கொள்வது முக்கியம். 


உள்ளங்கால் அரிப்பு: உள்ளங்கால் அடிக்கடி அரிப்பு ஏற்படும். எளிதில் இந்த அரிப்பு மறையாது. குறிப்பாக உள்ளங்காலின் கீழ் பகுதியில் அதிக அரிப்பு இருந்தால், அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும்.

உள்ளங்காலில் வீக்கம் மற்றும் வலி: சிலருக்கு அடிக்கடி தங்கள் பாதங்கள் அல்லது உள்ளங்காலின் கீழ் பகுதியில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். அலட்சியம் செய்யக்கூடாது. கல்லீரலில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். நீண்ட நாட்கள் அலட்சியப்படுத்தினால், கல்லீரல் மோசமடையத் தொடங்கும்.

Tap to resize

Latest Videos

கால் துர்நாற்றம்: அடிக்கடி கால் துர்நாற்றம், குறிப்பாக உள்ளங்கால்களில் இருந்து வந்தால் அலட்சியம் செய்யக்கூடாது. பாதங்களில் துர்நாற்றம் வீசுவது கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம்.

இளைஞர்கள் விரும்பி சாப்பிடும் ஷவர்மாவில் என்ன தான் இருக்கு? அது ஏன் ஆபத்தானது?

சூடான பாதங்கள்: சில சூழ்நிலைகளில், பாதத்தின் கீழ் பகுதி அதாவது உள்ளங்கால் சூடாக உணரப்படும். இது கல்லீரல் பிரச்சனை அறிகுறியாகும். கல்லீரல் சரியாக ரத்தத்தை சுத்தம் செய்யாதபோது, ​​பாதத்தின் உள்ளங்கால் சூடாகிவிடும்.

கால்களில் வீக்கம்: இது ஒரு நோயாகும், இதில் பாதங்கள் வீங்கி அவற்றில் குழிகள் தோன்றும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறியாகும். உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கால் நகங்களில் பூஞ்சை தொற்று: கால் நகங்களில் பூஞ்சை தொற்றும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

பெண்களே "இந்த" ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க...அப்புறம் உங்கள் வீட்டில் குவா குவா தான்..!!

கால் நகங்களில் வெண்மை:  கால் நகங்கள் வெண்மையாக மாற ஆரம்பித்தால், அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் அனைத்தும் மற்ற காரணங்களால் ஏற்படலாம் என்றாலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மருத்துவரை அணுகுவது அவசியம். 

click me!