கவனம்! கண்டறிய முடியாத 3 புற்றுநோய் வகைகள்.. தாமதமாகும் முன் எப்படி கண்டறிவது?

By Ramya s  |  First Published Sep 20, 2023, 7:34 AM IST

சில புற்றுநோய்கள் அறிகுறிகள், உடலில் பாதிக்க தொடங்கிய பின்னரே கண்டறியப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஆபத்தான நோய்களில் ஒன்றான புற்றுநோய் பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆனால் சில வகையான புற்றுநோய் ஏற்பட்டால், அதை கண்டறிய எந்த அறிகுறிகளும் இருக்காது. எனவே, பல சமயங்களில் நோயறிதல் கடினமாகி, நோய் வேகமாகப் பரவிவிடும். எனினும் சில புற்றுநோய்கள் அறிகுறிகள், உடலில் பாதிக்க தொடங்கிய பின்னரே கண்டறியப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது நோய் பரவிய பின் அல்லது கட்டி பெரிதாக வளர்ந்த பிறகு உணரப்படும். பின்னர் இமேஜிங் சோதனைகளில் காணக்கூடியதாக இருக்கலாம்.

புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிர் பிழைப்பதற்கான சிறந்த வாய்ப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைத் தரம் சாத்தியமாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் மூன்று புற்றுநோய் வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

 

HeartAttack Symptoms : நீங்கள் ஒரு போதும் புறக்கணிக்க கூடாத மாரடைப்பு அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

குடல் புற்றுநோய்

குடல் அல்லது பெருங்குடல் புற்றுநோய் உங்கள் பெருங்குடலின் உட்புறப் புறணியின் வளர்ச்சியிலிருந்து உருவாகிறது. இந்த நோய் கண்டறியப்படாவிட்டால் உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு மிக வேகமாக பரவுகிறது. சிறு குடல் புற்றுநோய்களை ஆரம்ப கட்டங்களில் கண்டறிவது கடினம் என்றும் மற்றும் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு புற்றுநோயைக் கண்டறிய அல்லது அதை நிராகரிக்க பல சோதனைகள் மற்றும் நடைமுறைகள் தேவைப்படுகின்றன என்று புற்றுநோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு குடல் புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணமாகும். 2020 ஆம் ஆண்டில், புதிதாக உலகளவில் 1.9 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த புற்றுநோய் காரணமாக 9,30,000 க்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?

மலக்குடலில் இருந்து ரத்தம் வெளியேறும்

வயிற்றுப்போக்கு

கழிப்பறைக்கு அடிக்கடி செல்வது

தீவிர மலச்சிக்கல்

குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் மலக்குடல் அல்லது வயிற்றில் பொதுவாக வலது புறத்தில் கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது. விரைவான எடை இழப்பு மற்றும் நாள்பட்ட வயிற்று வலி ஆகியவை நோய்க்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கணைய புற்றுநோய்

புள்ளிவிவரங்களின்படி, கணையப் புற்றுநோயானது உலகெங்கிலும் உள்ள எந்தவொரு பொதுவான புற்றுநோயிலும் மிக அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. இந்த நோய் கண்டறியப்பட்ட மூன்று மாதங்களுக்குள் பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் இறக்கின்றனர். இது வயிற்றின் கீழ் பகுதியில் அமைந்துள்ள கணையத்தில் உள்ள செல்களின் வளர்ச்சியாகத் தொடங்கும் புற்றுநோய் வகையாகும். கணையம், உணவை ஜீரணிக்க உதவும் நொதிகளையும் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் ஹார்மோன்களையும் உருவாக்குகிறது.

கணைய புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?

மஞ்சள் காமாலை

அடர் நிற சிறுநீர்

வயிற்று வலி

தொடர்ந்து முதுகு வலி

சோர்வு 

அரிப்பு

பசியின்மை

விரைவான எடை இழப்பு

உணவை விழுங்குவதில் பலருக்கு சிரமம் ஏற்படும். தொடர்ந்து வாந்தி அல்லது குமட்டல் போன்றவற்றை உணர்கிறார்கள். கணையம் இன்சுலின் உற்பத்தியை நிறுத்துவதால், பல நோயாளிகளும் நீரிழிவு நோயின் அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பப்பை புற்றுநோய்

கருப்பை புற்றுநோயைக் கண்டறிவது சில சமயங்களில் கடினமாக இருக்கும்., ஏனெனில் அறிகுறிகள் பெரும்பாலும் கடைசி கட்டங்கள் வரை உருவாகாது, இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த சைலண்ட் கில்லரை வெல்வதற்கான ஒரே தீர்வு முன்கூட்டியே கண்டறிதல் மட்டுமே என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கர்ப்பப்பை புற்றுநோய் அறிகுறிகளை ஏற்படுத்துவதற்கு முன்பு உங்கள் வயிறு முழுவதும் பரவுகிறது. 

“ 48 மணி நேரத்தில் கோமா நிலை கூட ஏற்படலாம்..” நிபா வைரஸின் 3 ஆபத்து காரணிகள் என்னென்ன தெரியுமா?

சில அறிகுறிகள் :

இடுப்பு மற்றும் வயிற்று வலி

நாள்பட்ட வீக்கம்

உணவை உண்ணவும், விழுங்கவும் முடியாது

பசியின்மை 

இரத்தப்போக்கு

குடல் இயக்கங்களில் மாற்றங்கள்

நாள்பட்ட வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்

அடிவயிற்றில் வீக்கம்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

மறுப்பு: இந்த பதிவிகுறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.

click me!