
கொழுப்பு உணவின் மிகப்பெரிய சக்தி. கிராம் ஒன்றுக்கு 9 கலோரிசத்து அளிக்க வல்லது. உடலின் சில செயல்பாடுகளுக்கு கொழுப்பும் அவசியமே. உணவில் கார்போஹைடிரேட் புரத சக்தி இல்லாத பொழுது கொழுப்பே எரி சக்தி அளிக்கின்றது.
கொழுப்பில் 4 பிரிவுகள் உண்டு
1.. ஆரோக்கியமான நல்ல கொழுப்பு
2.. நிறைவு பெறாத கொழுப்பு
3.. பல நிறைவு பெறாத கொழுப்பு
4.. ஆரோக்கிய மற்ற கெட்ட கொழுப்பு
காலம் காலமாக சத்துணவு நிபுணர்களாலும் மருத்துவர்களாலும் குறைந்த கொழுப்பு உணவு பரிந்துரைக்கபடுகிறது.
கெட்ட கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை கொண்டுள்ளது. அதன் காரணமாக உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நல்ல கொழுப்பு உடல் நலத்தையும் இருதயத்தையும் காக்கின்றது.
குறைந்த கொழுப்பு என்பதை அறிவது எப்படி?
* உணவு பொருட்களின் மீதுள்ள லேபிலை படியுங்கள்.
* கொழுப்பு குறைந்த அசைவம் கிடைக்கின்றது.
* கொழுப்பு குறைந்த பால், பால்பொருட்கள் கிடைக்கின்றது.
* எண்ணையை அப்படியே கொட்டாமல் கரண்டி கொண்டு ஊற்றுங்கள்.
* 17.5 கிலோ/100 கிராம் என்றால் மிகமிக அதிக கொழுப்பு.
* 3 கிலோ/100 கிராம் என்றால் நல்ல கொழுப்பு.
கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள்
* தோலுடன் இருக்கும் கோழிக்கறி
* கொழுப்பு நிறைந்தபால்
* வெண்ணெய்
* சீஸ்
* ஐஸ்கிரிம்
* பாம் ஆயில்
* கேக், பிட்சா வகைகள்
* பொரித்த உணவுகள்
* சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள்
கெட்ட கொழுப்பு உணவை தவிர்ப்பது மட்டுமே போதாது. நல்ல கொழுப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராம் கொழுப்பும் கர்போஹைடிரெட், புரத்தைவிட இரு மடங்கு, மும் மடங்கு அதிகமான கலோரி சக்தியை கொடுக்கின்றன. இதனால் தான் சரியான உடல் எடையை காக்க முடியாமல் போகின்றது.
நல்ல கொழுப்புக்கு உடலில் என்ன வேலை
** சக்தி அளிக்கின்றது.
** வைட்டமின் எ,டி,ஈ ,கே போன்றவைகள் கொழுப்பிலேயே கரைந்து உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
** உடலின் உஷ்ணத்தை சீராக வைக்கின்றது.
** உறுப்புகளின் மேல் ஒரு போர்வை போல் படர்ந்து உடலை காக்கின்றது.
** திசுக்களை ஆரோக்கியமாக வைக்கின்றது.
** மூளை த்சுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
** ஹோர்மோன்களை உருவாக்குகின்றது.
** தலை முடியும், சருமமும் செழுமை பெறுகின்றது.