உங்களுக்குத் தெரியுமா? பீட்ரூட் சாறை தேனுடன் கலந்து சாப்பிட்டால் அல்சர் குணமாகும்...

 
Published : Dec 27, 2017, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
உங்களுக்குத் தெரியுமா? பீட்ரூட் சாறை தேனுடன் கலந்து சாப்பிட்டால் அல்சர் குணமாகும்...

சுருக்கம்

Do you know Beatroot juice with honey

 

பீட்ரூட்-டில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள கார்போஹைட்ரேட், சர்க்கரைத் துகள்களாக இருப்பதால் விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்துவிடுகிறது.

பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 சதவீதம், புரதம் 17, கொழுப்பு 0.1, தாதுக்கள் 0.8, நார்சத்து 0.9, கார்போஹைட்ரேட் 0.8, சதவீதமும், கால்சியம் 18 மில்லி கிராம், பாஸ்பரஸ் 5.5, இரும்புச்சத்து 10, வைட்டமின் ‘சி’ 10 மில்லி கிராமும் உள்ளன.

பீட்ரூட்டில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றிச் சுத்தம் செய்யும்.

அதோடு, வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின், வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோரின், அயோடின், தாமிரச் சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் எனப்படும் குடற்புண் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிசாறு கலந்து சாப்பிட்டு வர சிருநீரங்களும், பித்தப்பையும் சுத்தகரிக்கப்படும்.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரைவில் குணமடையும்.

பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்துக்கு வழிவகுக்கும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சைச் சாறில் தோய்த்து உண்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீருடன் வினிகரை போட்டு, அதை ஆறாத புண்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த மருந்தாகும்.
பீட்ரூட்டை மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமடையும்.

பீட்ரூட் ரத்தசோகையைக் குணப்படுத்தும், மலச்சிக்கலைப் போக்கும், பித்தத்தைக் குறைக்கும், அரிப்பு மற்றும் எரிச்சலைத் தவிர்க்கும்.

சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்களை பீட்ரூட் போக்கிவிடும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க