பற்கள் வெண்மையாகி, ஈறுகள் பலமடைய கரிசலாங்கண்ணி கீரையை இப்படி சாப்பிட்டாலே போதும்...

 
Published : Dec 27, 2017, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
பற்கள் வெண்மையாகி, ஈறுகள் பலமடைய கரிசலாங்கண்ணி கீரையை இப்படி சாப்பிட்டாலே போதும்...

சுருக்கம்

Teeth are white gums are strong enough to eat the spinach

கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக தோன்றும் இதில் இரு வகை உண்டு. ஓன்று மஞ்சள் நிறத்திலும், இன்னொன்று வெள்ளை நிறத்திலும் பூ பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

இந்த கீரையில் தங்கச் சத்து உள்ளதால், இதை பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம்.

** இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சூரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும் எராளமான தாதுசதுக்களும் இந்த கீரையில் உள்ளன.

** நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது. 

** மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சாம் அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

** கண்,முகம்,வெளுத்து,கை,கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்க்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

** குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும்.

** கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி நல்லெண்ணெய் 100 மி.லி அதிமதுரம் 10 கிராம் போன்றவைகளை சேர்ந்து காய்ச்சி 5 மி.லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி,இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்.

** இதனை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.

** இந்த கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு,தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.

** இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் வாந்தியாக வெளியேறிவிடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல்,மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்.

** சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளையும் கரிசலாங்கண்ணி நீக்கும். ஒற்றை தலைவலியால் துன்ப்படுகிரவர்கள் இந்த கீரையை மென்று உள்நாக்கில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலி அகலும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க