
1..ஆதொண்டை
தனியிளைகளைக் கொண்ட முள்ளுள்ள ஏறு கொடி. செந்நிறப் பூக்களையும் சதைக்கனியையும் கொண்டது. காய்கள் சமைத்து உண்ணக் கூடியவை. தமிழகமெங்கும் வேலிகளில் தானே வளர்கிறது. இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
நோய் நீக்கி உடல் தேற்றவும், பசிமிகுக்கவும் நாடிநடையை மிகுந்து உடல் வெப்பந் தரவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இலையை நெய்யில் வதக்கிக் துவையலாக்கி உணவுடன் கொள்ளச் சுவையின்மை, பசியின்மை நீங்கி பசியுண்டாகும்.
50 கிராம் வேர்ப்பட்டை நன்கு சிதைத்து 1 லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி ஆகக் காய்ச்சி வடித்து 3 பங்காக்கிக் காலை, மதியம், மாலையாக சாப்பிட்டு வரப் பசியின்மை, வாந்தி, மார்பு வலி ஆகியவை தீரும்.
2.. ஆடுதின்னாப் பாளை
மாற்றடுக்கில் அமைந்த வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களையுடையது. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கிறது. பங்கம்பாளை என்றும் அழைப்பதுண்டு. எல்லாப் பாகங்களும் மருத்தவப் பயனுடையது.
வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்ககைத் தூண்டும் மருந்தாகவும் பெரு கால வலியை மிகுக்கும் மருந்தாகவும் பயன்படும்.
10 மி.லி இலைச்சாறு காலை மாலை குடித்து வர ஒருங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டுவிட்டுவரும் காய்ச்சல் குணமாகும்.
இலைச்சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கொள்ளப் பாம்பு விஷம், சில் விஷம், மலக் கிருமிகள், கருங்குட்டம், யானைத் தோல் சொறி தீரும்.
வேரை அரைத்துக் காலை, மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியத்தில் வைக்க (புதுப்பானையில் உப்பில்லாத பச்சரிசி பொங்கல், 24 மணி நேரம் தூங்க விடக் கூடாது) 3 நாள்களில் எல்லா விதப் பாம்பு நஞ்சும் தீரும்.
வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை தீர்ந்து சுகப்பேறு ஆகும்.
விதைச்சூரணம் 5 கிராம் விளக்கெண்ணையில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி, சூதகத்தடை, மலக்கிருமிகள் நீங்கும்.