
பால்:
ஆரோக்கியம்:
வைட்டமின் ‘பி’ மற்றும் கால்சியத்தின் அபாரமான பிறப்பிடம் பால்தான்.
பசும்பாலில் நல்ல தரமான புரோட்டின் உடன், எட்டு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கின்றன.
நிறைய பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை வருவதில்லை என்று டச்சு விஞ்ஞானிகள் குழு அறிவித்திருக்கிறது.
தீமைகள்:
நீங்கள் குடிக்கும் பால் எங்கிருந்து வரவழைக்கப்படுகிறது தெரியுமா? ஹார்மோன் ஊசிகள் வழியாக’’ என்று பயமுறுத்துகிறார்கள் சில டாக்டர்கள்.
கொஞ்சம்கூட சுகாதாரமற்ற இடங்களில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு க்ஷீதீரீலீ என்ற ஹார்மோன் ஊசி போடப்பட்டு பால் வரவழைக்கப்படுகிறது.
கூடவே ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் ஊசியும் பயன்படுத்தப்படுகிறது. இது மனித உடலுக்குள் வரும்போது ‘ஹார்மோன் இம்பேலன்ஸ்’ உருவாக்கும்.
தவிர, பாலில் முழுக்க சாச்சுரேடட் கொழுப்பு இருக்கிறது. இத்தனை அதிகம் சாப்பிட உடலில் கொலஸ்டிரால் கூடிவிடும்.
தீர்வு:
ஆர்கானிக் பால் பொருட்களுக்குச் செல்லுங்கள். விலை அதிகமாக இருக்கும். ஆனால், இதுவே நல்ல வழி. இவற்றில் ஹார்மோன்கள் கிடையாது. இந்தப் பாலில் 70 சதவிகித ஒமேகா 3 இருக்கிறது. இது இருதயத்திற்கு மிக மிக நல்லது.
மற்றொரு வழி ஸ்கிம்டு பால் பயன்படுத்துவது. ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுகிற பாலின் அளவு 200 மி.லி.