
காபி
நன்மைகள்:
காபி, கல்லீரல் பிரச்னை உடையவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
காபியின் கெடுதலை பெரிதாக யாராலும் நிரூபிக்க முடியவில்லை. இந்திய உணவில் தேநீருக்கு அடுத்தபடியாக காபியில்தான் இயற்கையான ‘ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள்’ கிடைக்கின்றன.
காபி சுலபத்தில் விழிப்புணர்வைத் தூண்டுகிறது, ஞாபக சக்தியில் பங்கு கொள்கிறது.
தீமைகள்:
கர்ப்பிணிகள் காபி குடித்தால் அபார்ஷன் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
தூக்கம் பாதிப்பு அடையும்.
நெஞ்செரிச்சல் உருவாகும் உணவுக் குழாய் முடியும் இடத்தில் இருக்கும் ஒரு வால்வை காபி ஒழுங்காக செயல்படவிடாது. இதனால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்கு மேல்நோக்கி வந்துவிடும் பாதிப்பு இருக்கிறது.
காபிக்கும் இருதய பாதிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் இருக்கின்றன. காபி இரத்தக் குழாய்களைச் சுருக்கும் தன்மை கொண்டது. இதனால் இரத்த அழுத்தம் உயரும்.
தீர்வு:
காபி குடித்தே ஆகவேண்டும் என்கிறவர்கள் இரண்டு கப்பிற்கு மேல் பில்டர் வேண்டாம்.
இருதய பிரச்னை இருந்தால் பில்டர் காபி மட்டும் குடிங்கள். எக்ஸ்பிரஸோ வேண்டாம்.