
முட்டை:
ஆரோக்கியம்
மிகச் சிறந்த புரோட்டின் முட்டையில் இருக்கிறது. கூடவே நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் இருக்கின்றன.
கோலின் என்கிற ஒரு விஷயம் ஞாபகசக்திக் குறைவைத் தடுக்கிறது. லுப்பின், ஸியாசாந்தின், கரோடினாய்டுகள் கண்களுக்கு முழு பாதுகாப்பை வழங்குகின்றன.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் 60 வயதுக்கு மேற்பட்ட 45 வயது ஆண்கள் கலந்து கொண்டு ஒரு நாளைக்கு மூன்று முட்டைகள் சாப்பிட்டார்கள். அவர்கள் இருதயத்திற்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களில் 70 சதவிகிதம் பேர்களுக்கு கொலஸ்டிராலில் எந்த மாற்றமும் இல்லை. முட்டை கையில் இருப்பது அவ்வளவு ஆரோக்கியம்.
ஆபத்து:
ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 300 மிகி கொலஸ்டிரால் இருக்கிறது. ஆம்லெட் பிரியர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது.
தேசிய உணவு ஆய்வுக்கழகம் இருதய பாதிப்பு வராமல் தடுக்க 200 மிகி கொலஸ்டிராலைத்தான் ஒரு நாளைக்கு அனுமதிக்கிறது. ஒரு முட்டை சாப்பிட்டால் அந்த நாளின் கொலஸ்டிரால் அளவு தாண்டிவிடும்.
தீர்வு:
முட்டை எடுத்துக் கொள்கிற அளவை உங்கள் குடும்ப நலம், இரத்த அழுத்த அளவு, சோம்பேறியான வாழ்க்கை நிலை, இரத்தத்தின் கொலஸ்டிரால் அளவு என்பதைப் பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும்.