எச்சரிக்கை: இப்போ உங்களுக்கு மலச்சிக்கலாய் தெரிவது பிற்காலத்தில் புற்றுநோயாய் கூட மாறலாம்…

Asianet News Tamil  
Published : Aug 21, 2017, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
எச்சரிக்கை: இப்போ உங்களுக்கு மலச்சிக்கலாய் தெரிவது பிற்காலத்தில் புற்றுநோயாய் கூட மாறலாம்…

சுருக்கம்

Warning Now that you see constipation can become cancerous later in life ...

மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்:

“பொதுவாக தினமும் 2 முதல் 3 லிட்டருக்கு குறைவாக தண்ணீர் பருகுவது.

பழம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது.

எண்ணெய் அதிகம் கலந்த வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது.

சிவப்பு நிற இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிடுவது.

உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது” இவையெல்லாம் தொடக்கநிலை காரணங்கள்.

இன்றைய இளம் வயதினரின் உணவுப் பழக்கவழக்க லைப் ஸ்டைலால் மலச்சிக்கல் ஏற்படுவது இயல்பாகி விட்டது.

இதை கண்டுக்கொள்ளாமல் அப்படியே விட்டார் மலக்குடலில் புற்றுநோயோ, கட்டிகளாக கூட உருவெடுக்கும்.

மலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலோ, மீண்டும் மீண்டும் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலோ, அந்த நேரத்தில் வலி ஏற்பட்டால் கூட சர்வ சாதாரணமாக எண்ணுகிறோம்.

உண்டெல்லாம் வயிற்றிலேயே தங்கிவிட்டால் உடலும் குப்பைத் தொட்டிதான். உண்டது செரித்து கழிவுகள் வெளியேறினால் தான் அது நல்ல ஆரோக்கியம் கொண்ட உடம்பு. இல்லையேல் அதுவும் சாக்கடையும் போன்றுதான்.

தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் மருத்துவர்களை சந்திப்பதில் தயங்க வேண்டாம். மலச்சிக்கல் என்று மருத்துவரிடம் எப்படி சொல்வது? கூச்சமா இருக்கே! என்றெல்லாம் நினைக்க வேண்டாம். நன்றாக பசி எடுப்பதும், சாப்பிட்ட உணவு கழிவாய் வெளியேறுவதும் தடைபடாமல் இருந்தாலே நீங்கள் பல்லாண்டுகள் வாழலாம்.

மலச்சிக்கலை மருத்துவரிடம் சொல்லாமல் விட்டால் குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மலத்தோடு ரத்தம் சேர்ந்து வரும். அப்போ இன்னும் விபரீதம் தானே. குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் போன்றவைகளின் அறிகுறியாகவும் இது மாறலாம்.

மலக்குடலில் இரு பகுதிகளிலும் குஷன் போன்ற மெல்லிய தசைப்பகுதி இருக்கிறது. மலத்தை வெளியேற்ற இதன் பங்களிப்பு மிக அவசியம். மலச்சிக்கல் ஏற்பட்டு, முக்கும்போது இந்த குஷன் பகுதி அழுத்தப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாகி கீழே இறங்கிவிடும். இதைத்தான் நாம் உள்மூலம், வெளிமூலம் என்று இரண்டு வித பாதிப்புகளாக குறிப்பிடுகிறோம்.

இந்த மூலநோய் நான்கு விதமான நிலைகளைக் கொண்டது. முதல் இருகட்ட பாதிப்பு வெளியே தென்படாமல் உள்ளேயே இருக்கும். 3, 4-ஆம் நிலை பாதிப்பு ஆசன வாய் வழியாக வெளியே தெரியும்.

இப்படி சாதாரணமாக மலச்சிக்கலாய் ஆரம்பித்து, புற்றுநோய் வரை வளர்ந்த பிறகு சிகிச்சை எடுப்பதற்கு ஆரம்பித்திலேயே சரிசெய்துவிடுவது நல்லது தானே.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake