
உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களில் சுரைக்காயும் ஓன்று. சுரைக்காய் உணவகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர் கலன்களாகப் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது.
சுரைக்காய் 2 அடி நீளம் 3 அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடிய நீர்சத்து மிகுந்த காய்கறி ஆகும். இது மலிவு விலையில் கிடைக்கும் காய்கறிகளில் ஓன்று. இதில் அதிக சத்து நிறைந்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகெங்கும் சாகுபடி செய்யப்பட்டாலும், இதன் பூர்வீகம் தென்னாப்பிரிக்கா ஆகும். உடம்பில் கொழுப்பை கரைப்பதிலும் சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே.
உடலில் கொழுப்புச் சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம்.
சுரைக்காய் சூப் தலைமுடி வளர்வதையும் ஊக்கப்படுத்துகிறது.
சுரைக்காயில் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ளது. இது எலும்புக்கும், பற்களுக்கும் வலு கொடுக்கிறது. ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுரைக்காய் நல்ல மருந்து.
கோடை காலத்தில் இதில் உள்ள தண்ணீர்ச் சத்து வெட்கை அலர்ஜியை தடுக்கிறது. சுரைக்காயின் மொத்த எடையில் 96 சதவீதம் நீர்ச்சத்து என்பது குறிப்பிடத்தக்கது.
தோலில் சீமம் எனப்படும் எண்ணெய் சுரப்பை கட்டுபடுத்தி சமநிலைப்படுத்துகிறது. இதன் காரணமாக, முகத்தில் முகப்பரு தோன்றுவதை தவிர்க்கலாம்.
கல்லீரல் பதிப்பு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கும் சிறந்த மருந்தாக சுரைக்காய் உள்ளது.