ஆரோக்கிய வாழ்விற்கு விருந்தளிக்கும் நெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள் இதோ...

 
Published : Dec 22, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
ஆரோக்கிய வாழ்விற்கு விருந்தளிக்கும் நெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள் இதோ...

சுருக்கம்

Here are the amazing medicinal properties of Nellikai that are celebrating healthy life ...

மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் நெல்லிக்கனியை வலிமை நெல்லி,உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். 

ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையானது.

நெல்லியின் மருத்துவ குணங்கள் வேறு பழங்களில் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அதில் மருத்துவ குணங்கள் அதிகம். 

மனிதனை இளமையாக வைத்துகொள்ள முக்கியமானதாக சொல்லப்படும் காயகல்பத்தில் நெல்லி தான் பிரதான பொருள். மேலும் இது தாது விருத்திக்கும், தலை முடி டானிக்காகவும் பயன்படுகிறது. 

இதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. அதனால் கண்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. 

நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு மேன்மையான ஆரோக்கியம் பெறலாம். 

ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்தால் அந்த நீர் தூய்மையான குடிநீராக மாறிவிடும். 

100 கிராம் நெல்லிச்சாற்றில் 82 சதவீதம் நீரும், 0.5 சதவீதம் புரதமும், 0.1 சதவீதம் கொழுப்பும், 14 சதவீதம் மாவுப்பொருளும், 3.5 சதவீதம் நார்ச்சத்தும், 50 யூனிட் அளவு கால்சியமும், 20 யூனிட் பாஸ்பரசும், 1.2 யூனிட் இரும்பும், 600 யூனிட் வைட்டமின் ‘சி’ யும் உள்ளன.

இது பல் நோய், அஜீரணம், மூட்டு வலி ஆகியவற்றை குறைக்கிறது. அருமையான கண் பார்வையை தரும். நீண்ட ஆயுளுக்கு தினமும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும். பசியின்மை விலகி நல்ல பசியை உணர வைக்கும். மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் போன்றவை குணமாகும். 

பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் ‘சி’ குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது. 

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்கனி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கொண்டது. 

உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி, என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்க்கு உண்டு. 

பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.


ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு அதிகம் வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளை விட 3 மடங்கு புரதச் சத்து நெல்லயில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள விட்டமின் ‘சி’ சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கபப்டுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுயன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. இதய வால்வுகளில், ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. ஆக, நெல்லியை தினமும் சாப்பிடுவதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம்.
 

PREV
click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!