சருமம் பொலிவு பெற வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்தினாலே போதும்! நல்ல பயன் தரும்...

First Published Dec 22, 2017, 1:37 PM IST
Highlights
It is enough to use cucumber to get the skin bleached! Good use ...


வெள்ளரிக்காய்

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் திகழ்கிறது. தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

வெள்ளரிக்காயை நறுக்கி, கண்ணைக் சுற்றி கருவளையம் உள்ள இடத்தில் வைத்து வந்தால் விரைவில் அது மறையும். 

புகை பிடிப்பது, மதுபானங்கள் குடிப்பது ஆகியவற்றால் உடலில் அதிகரிக்கும் தீமையைக் கட்டுபடுத்துவதில் வெள்ளரிக்கு தனி இடம் உண்டு.

நமது சருமம் பொலிவுடன் திகழவும் வெள்ளரிக்காய் உதவுகிறது.

வெள்ளரிக்காயை நன்கு அரைத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் ஓட்ஸ், தயிர் மற்றும் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின் அதை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்தால் உங்கள் சருமம் பொலிவு பெறுவது நிச்சயம்.

மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. 

நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.
 

click me!